அலிகார் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிகார் முற்றுகை
Siege of Aligarh
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் பகுதி

பெரோன் முகாம் மீதான தாக்குதல் மற்றும் அல்லிகுர் தாக்குதல், ஆகத்து - செப்டம்பர் 1803
நாள் 1–4 செப்டம்பர் 1803
இடம் அலிகர், இந்தியா
பிரித்தானியர் வெற்றி
பிரிவினர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மராட்டியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
செனரல் லேக்கு பியர் கியுலியர்-பெரோன்
இழப்புகள்
900 300

அலிகார் முற்றுகை (Siege of Aligarh) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் மராத்தா கூட்டமைப்புக்கும் இடையே இரண்டாம் ஆங்கிலோ-மராத்தா போரின் போது (1803-1805) இந்தியாவின் அலிகார் நகரில் நடந்த போரைக் குறிக்கிறது. அலிகார் போர் என்றும் இம்முற்றுகையைக் குறிப்பிடுவர்.[1]

இந்தியாவின் வலிமையான கோட்டைகளில் ஒன்றான அலிகார் கோட்டை, பிரெஞ்சு கூலிப்படை அதிகாரியான பியர் பெரோனால் பலப்படுத்தப்பட்டு அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. 1803 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, தளபதி லார்ட்டு கெரார்டு லேக்கு தலைமையில் அலிகார் கோட்டை முற்றுகையிடப்பட்டது. இப்போது யார்க்சயர் படைப்பிரிவு என்று அழைக்கப்படும் பிரித்தானிய 76 ஆவது படைப்பிரிவு இம்முற்றுகையில் கெரார்டு லேக்குக்கு உதவியது. 1803 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று மராட்டியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து அலிகார் கோட்டை கைப்பற்றப்பட்டது.[2] தாக்குதலின் போது, பிரெஞ்சு வீரர்களால் கோட்டையைச் சுற்றி பதினான்கு அகழிகள் வாள் கத்திகள் மற்றும் நச்சு ஆயுதங்கள் என வரிசையாக அமைக்கப்பட்டன. சுவர்கள் பிரெஞ்சு பீரங்கிகளால் பலப்படுத்தப்பட்டன. புலிகள் மற்றும் சிந்தியாவின் சிங்கங்கள் போன்ற விலங்குகள் கூட பிரெஞ்சுக்காரர்களால் பயன்படுத்தப்பட்டன.[2] போரின் போது ஆங்கிலேயர்கள் 900 படை வீரர்களை இழந்தனர்.[2] அப்போதைய வெலிங்டன் பிரபு இந்த வெற்றியை "வட இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றியது மிகவும் அசாதாரணமான சாதனைகளில் ஒன்று" என்று அறிவித்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
  2. 2.0 2.1 2.2 Thackeray, William Makepeace (2013). "The Tremendous Adventures of Major Gahagan Chapter 2". CreateSpace. ISBN 978-1490979120. Archived from the original on 2007-06-23.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. Butalia, Ramesh C. (1998). The Evolution of the Artillery in India. Allied. பக். 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170238720. http://www.google.com.sg/books?id=CtP1ImudK88C&pg=PA239. பார்த்த நாள்: 10 October 2018. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகார்_முற்றுகை&oldid=3412300" இலிருந்து மீள்விக்கப்பட்டது