அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2009
தலைவர்முனைவர் டி. கிருஷ்ணமீர்த்தி, எம்இ.,பிஎச்.டி.
முதல்வர்முனவர். ஜோசப் ஜவகர், எம்இ.,பிஎச்.டி., எம்.பி.ஏ.
மாணவர்கள்2,200
பட்ட மாணவர்கள்2,060
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்140
அமைவிடம்
நாகர்கோவில், வெள்ளிச்சந்தை, மன்னவிளை
, ,
இணையதளம்www.arunachalacollege.com

அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி (Arunachala College Of Engineering For Women) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், வெள்ளிச்சந்தை, மன்னவிளையில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது தமிழ்நாட்டின் அனைத்து மகளிர் பொறியியல் கல்லூரிகளில் முதலாவது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழக முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 14 வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் பல்வேறு இளநிலை முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது.

சாதனைகள்[தொகு]

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 14 வது இடம்
  • 2013 ஆண்டில் பல்கலைக்கழக தரவரிசையில் 21வது இடம்
  • 2014 ஆண்டில் பல்கலைக்கழக தரவரிசையில் 23வது இடம்
  • 2015 ஆண்டில் பல்கலைக்கழக தரவரிசையில் 32வது இடம்
  • எம்.இ. (CEM) இல் 2016 ஆண்டு பிரிவில் பல்கலைக்கழக தங்கப் பதக்கம், பல்கலைக்கழக தரவரிசையில் 34வது இடம்
  • 2016 ஆண்டு பிரிவில் 418 மாணவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியில் சேர்க்கப்படனர்
  • 2017 ஆண்டு பிரிவின் 373 மாணவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியில் சேர்க்கப்பட்டனர்.

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் பி.இ.
கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பி.இ.
சிவில் இன்ஜினியரிங் துறையில் பி.இ.
எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலில் பி.இ.
எம்.இ. தொடர்பு அமைப்புகள்
எம்.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
எம்.இ. கட்டுமான பொறியியல் மற்றும் மேலாண்மை
எம்.இ. பவர் எலெக்ட்ரானிக்ஸ் & டிரைவ்கள்
எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலில் பி.எச்.டி.