அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி

ஆள்கூறுகள்: 12°07′19″N 78°09′22″E / 12.122°N 78.156°E / 12.122; 78.156
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி
GDMC&H
உருவாக்கம்2008
Parent institution
துறைத்தலைவர்மரு. கு. அமுதவள்ளி
பட்ட மாணவர்கள்100
அமைவிடம், ,
இந்தியா

12°07′19″N 78°09′22″E / 12.122°N 78.156°E / 12.122; 78.156
இணையதளம்www.dmcdpi.ac.in

அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி (Government Dharmapuri Medical College) என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டின் சிறந்த 15 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

தருமபுரி மருத்துவக் கல்லூரியானது 2008ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தர்மபுரி நகராட்சி எல்லையில் நேதாஜி புறவழிச்சாலையில் அமைத்திட பணிகள் துவங்கியது.[1] இம்மருத்துவக் கல்லூரிக்கு அன்றைய துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் 2010 சனவர் 19ஆம் நாளன்று அடிக்கல் நாட்டினார்.[1] இக்கல்லூரி ஆண்டுக்கு 100 மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பிற்குச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இதில் 85 மாநில ஒதுக்கீட்டு இடங்களாகவும் 15 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளன. இக்கல்லூரி இந்திய மருத்துவ கழக அங்கீகாரம் 2013ஆம் ஆண்டு வழங்கியது. இந்தக்கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 3000 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர்.

மருத்துவ சேவைகள்[தொகு]

இக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் புற மற்றும் அக நோயாளிகளாக மருத்துவச் சேவையினைப் பெறுகின்றனர். ஆய்வகம் மற்றும் இரத்த வங்கி சேவைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையமும் இங்கு உள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் சிறப்பு மருத்துவ பிரிவுகள் மற்றும் சேவைகள்:[2]

  1. பிளவுப்பட்ட பாத சிகிச்சைப் பிரிவு- ஒவ்வொரு சனிக்கிழமையும்.
  2. பிறவி குறைபாடுகளைக் கண்டறியும் பிரிவு- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்.
  3. உயர் இரத்த அழுத்தப் பிரிவு- ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழன்
  4. நீரிழிவு பிரிவு- ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழன்.
  5. திருநங்கைகள் பிரிவு- ஒவ்வொரு திங்கள் மற்றும் சனிக்கிழமை.
  6. கிளௌகோமா பிரிவு- ஒவ்வொரு திங்கள் மற்றும் சனிக்கிழமை.
  7. கார்னியா பிரிவு- ஒவ்வொரு திங்கள் மற்றும் சனிக்கிழமை.
  8. பதின்வயதுடையோர் பிரிவு- ஒவ்வொரு சனிக்கிழமையும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Institution History". dmcdpi. Archived from the original on 4 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Hospital Services : Special Clinics". Government Dharmapuri medical college. Archived from the original on 10 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]