அய்யனகெரே

ஆள்கூறுகள்: 13°26′35″N 75°52′48″E / 13.443014°N 75.879976°E / 13.443014; 75.879976
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யனகெரே
View of the lake
View of the lake
கருநாடகத்தில் ஏரியின் அமைவிடம்
கருநாடகத்தில் ஏரியின் அமைவிடம்
அய்யனகெரே
அமைவிடம்சிக்மகளூரு மாவட்டம், கருநாடகம், இந்தியா
ஆள்கூறுகள்13°26′35″N 75°52′48″E / 13.443014°N 75.879976°E / 13.443014; 75.879976
ஆற்று மூலங்கள்வேதவதி
வடிநிலப் பரப்புKrishna Basin

அய்யனகெரே (Ayyanakere) என்பது இந்தியாவின் கருநாடகத்தின் சகராயபட்னம் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏரியாகும். இது சிக்மகளூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரானது சுமார் 15 கி.மீ தொலைவு வரை உள்ள பல கிராமங்களின் வேளாண் பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரியில் இருந்து பாசணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல 10 கால்வாய்கள் உள்ளன.

ஏரி[தொகு]

இந்த ஏரி முதலில் சகராயபட்னம் என்ற கிராமத்தின் ஆட்சியாளரான ருக்மாங்கத ராயரால் கட்டப்பட்டது என்றும் பின்னர் கி.பி 1156 இல் போசள மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இதனால் 1560 எக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. [1] சகுனகிரி மலையை பின்னணியாக கொண்டுள்ள அழகிய நிலப்பரப்புக்காக இந்த ஏரி அறியப்படுகிறது. ஆனால் போதுமான வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் இந்த ஏரியைப் பார்க்க வருவதில்லை. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ayyanakere". Chickmagalur Govt. agencies. Archived from the original on 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
  2. "The Lore of Ayyanakere". Deccan Herald Newspaper. http://www.deccanherald.com/content/268018/lore-ayyanakere.html. பார்த்த நாள்: 29 July 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யனகெரே&oldid=3877582" இலிருந்து மீள்விக்கப்பட்டது