அமீன் மன்சில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமீன் மன்சில் (Amin Manzil) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஐதராபாத் நகர சாய்தாபாத் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடமாகும். ஐதராபாத் நகர அபிவிருத்தி ஆணையத்தால் பாரம்பரிய தளமாக இக்கட்டிடம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அமீன் காலனி என்ற பெயரிலும் மற்றொரு இடம் உள்ளது. சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்த கட்டிடம் 2018 இல் இடிக்கப்பட்டது.[1]

இந்த வரலாற்று கட்டமைப்பிற்கு ஐதராபாத் மாநில நிர்வாக சபை உறுப்பினராக இருந்த நவாப் சர் அமீன் யங் பகதூர் எனப்படும் அகமது உசேனின் பெயர் இக்கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது. 1895 ஆம் ஆண்டில் மெட்ராசில் இருந்து வந்த இவர் முதலில் ஐதராபாத்தில் நிசாமின் தலைமைச் செயலக அலுவலகத்தில் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் சைதாபாத் நிசாமின் தலைமைச் செயலாளராக உயர்ந்தார். புத்தகங்களின் மீதான அன்பு ஐதராபாத்தில் உள்ள பெரும்பான்மையான அதிகாரிகளிடமிருந்து இவரை வேறுபடுத்தியது. அமீன் மன்சில் என்று பெயரிடப்பட்ட இக்கட்டிடத்தில் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கி வைத்திருந்தார். இந்த கட்டிடத்தில் தாழ்வாரங்களின் மீது சுவாரசியமான பெட்டகக் கூரைகளும், இந்திய மற்றும் மேற்கத்திய பாணியிலான கட்டிடக்கலைகளும் இருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீன்_மன்சில்&oldid=3353273" இலிருந்து மீள்விக்கப்பட்டது