அப்பாச்சி டாம்கேட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அப்பாச்சி டாம்கேட் | |
|---|---|
| உருவாக்குனர் | அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன் |
| பிந்தைய பதிப்பு | 6.0.14 / மே 15, 2007 |
| இயக்குதளம் | பல் இயங்குதளம் |
| வகை | Web Container |
| அனுமதி | Apache 2.0 Licence |
| இணையத்தளம் | அப்பாசி டாம்கேட் |
அப்பாச்சி டாம்கேட் (இலங்கை வழக்கு: ரொம்கட்) ஆனது அப்பாசி சாப்ட்வேர் பவுண்டேசனின் ஓர் வலை சேவகன் ஆகும். சண் மைக்ரோசிஸ்டத்தின் விதிமுறைகளுக்கமைய ஜாவா செர்வ்லெட் மற்றும் ஜாவா செர்வர்பேஜஸ் ஆகியவற்றை வலை சேவகனிலேயே இயக்கக்கூடிய வசதியுள்ளது. எக்ஸ்எம்எல் முறையிலான கோப்புக்களினால் விருப்பத்திற்கேற்றவாறு இவ் இணையவழங்கியை நிர்வாகிக்கமுடியும். டாம்கேட் தன்னுடைய இணைய வழங்கியைக் கொண்டுள்ளது.
[தொகு] விருத்தி நிலை
அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசனின் அங்கத்தவர்களும் தன்னார்வலர்களும் சேர்ந்தே டாம்கேட்டை விருத்தி செய்து பராமரிக்கின்றனர். பயனர்கள் அப்பாச்சி அனுமதி மூலம் மூலநிரலையும் இருமத்தையும் பெற்றுக்கொள்ளலாம். டாம்கேட்டின் பதிப்பானது 3.0.x உடன் ஆரம்பிக்கின்றது. (இதற்கு முந்தியவை சண்மைக்ரோசிஸ்டத்தின் உட்பாவனைக்கென உருவாக்கப்பட்டது வெளியில் விடப்படவில்லை). டாம்கேட் 6.0.14, 6.0.x வரிசையில் வரும் பதிப்புக்களின் ஆகப்பிந்தைய வினைத்திறனான பதிப்பாகும். [1] இது சேர்வ்லெட் 2.5 ஐ ஆதரிக்கின்றது. [2], 2007.
[தொகு] உசாத்துணைகள்
- ↑ "Apache Tomcat 6 Downloads". Apache Software Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-03-14.
- ↑ "Apache Tomcat -- Which Version Do I Want?". Apache Software Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-01-22.