அப்துல் ஜப்பார் (தமிழ்நாடு மட்டைப் பந்து வீரர்‌)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல் ஜப்பார் (Abdul Jabbar) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட விளையாட்டு வீரராவார். 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாளன்று இவர் பிறந்தார். ஓர் உறுதியான இடது கை நடுவரிசை மட்டையாளராக ஜப்பார் விளையாடினார். தன்னுடைய 15 ஆண்டுகால துடுப்பாட்ட வரலாற்றில் ஜப்பார் முதல் தரப்போட்டிகளில் விளையாடி 4,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். 1972-73 முதல் 1986-87 வரை தமிழ்நாடு அணிக்காக ஜப்பார் தனது முதல் தர துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 1975-76 ஆம் ஆண்டில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் ஜப்பார் இரட்டை சதம் அடித்தார். 1986-87 இல் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிற்காலத்தில் அசாம் மாநில ரஞ்சிக் கோப்பை அணியின் பயிற்சியாளராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Committed strokes". web.archive.org. 2004-01-17. Archived from the original on 2004-01-17. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)