அபிசேக் மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிசேக் மிசுரா

அபிசேக் மிசுரா (Abhishek Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1977 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பேராசிரியரான இவர் உத்தரபிரதேசத்தின் அமைச்சரவைக் குழுவிலும் அமைச்சராக இருந்துள்ளார். இந்திய சரக்கு மற்றும் சேவை வரி குழுவில் உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தற்போது சமாச்சுவாதி கட்சியின் தேசிய செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் பணிபுரிகிறார். அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் வணிகக் கொள்கைப் பகுதியின் (வியூகம் மற்றும் கண்டுபிடிப்பு) ஆசிரியராக இருந்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் வியூகம் மற்றும் சந்தைப்படுத்தல் பாடங்களில் முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும் ஐக்கிய இராச்சியத்தின் கிளாசுகோ நகரத்தில் மேலாண்மை பாடத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றிருந்தார்.

2012 ஆம் ஆண்டில் 16 ஆவது மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சமாச்சுவாடி கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] [2] [3] . ஆறாவது ஊதியக் குழுவின் ஆலோசகராகவும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் பணிபுரிவதைத் தவிர, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகளின் பயிற்சி பெற்ற குழுக்களின் ஆலோசகராகவும் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கும் சேவை செய்துள்ளார். [4] உத்தரபிரதேசத்தின் மிக முக்கியமான பிராமண தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்டார். [5] சமீபத்தில் இலக்னோவில் உள்ள சரோச்சினி நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினருக்கான போட்டியில் பங்கேற்க வழங்கப்பட்டது. [6] பேராசிரியர் மிசுரா உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uttar Pradesh Legislative Assembly (UPLA): Member info". Archived from the original on 3 February 2021. பார்க்கப்பட்ட நாள் 30 January 2021.
  2. "2012 Election Results". http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. 
  3. "Lucknow switch: How IITian Abhishek Mishra replaced Mulayam man in 5 minutes flat".
  4. "IIM prof turns candidate,stays manager".
  5. "एसपी के पूर्व मंत्री अभिषेक मिश्रा बोले- यूपी में ब्राह्मण के बिना राजतिलक अधूरा".
  6. "UP polls: Samajwadi Party fields former ministers Swami Prasad Maurya from Fazilnagar, Abhishek Mishra from Sarojini Nagar".
  7. "Assembly elections: Terabytes for mega-votes".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_மிசுரா&oldid=3887804" இலிருந்து மீள்விக்கப்பட்டது