அனூப்பூர் அனல் மின் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனூப்பூர் அனல் மின் திட்டம் (Anuppur Thermal Power Project) இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலம், அனூப்பூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 2520 மெகாவாட் மின்னுற்பத்தித் திட்டமாகும். முன்னதாக மோசர் பேயர் என்றழைக்கப்பட்ட இந்துசுதான் மின் திட்டங்கள் நிறுவனம் அனூப்பூர் அனல் மின் திட்டத்தை நிர்வகிக்கிறது. நிலக்கரியை அடிப்படை எரிபொருளாகப் பயன்படுத்தும் அனல் மின் நிலையமாக அனூப்பூர் அனல் மின் திட்டம் செயற்படுகிறது.

முக்கிய நபர்கள்[தொகு]

இராதுல் பூரி – நிறுவனத் தலைவர்
இராகவ் திரிவேதி – தலைவர், அனல்மின்சாரம்.
யோகேசு மகாட்டோ – திட்டத் தலைவர்

அலுவலகங்கள்[தொகு]

இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் பின்வரும் இடங்களில் காணப்படுகின்றன.

  • தில்லி – ஆக்லா, மூன்றாம் நிலை
  • போபால் – இரிவேரா நகரம்
  • அனூப்பூர் – கோட்மா சாலை

நிலை 1[தொகு]

சூன் 2015 இன்படி 1200 மெகாவாட் கொள்திறன் (2X600 மெகாவாட்) அளவுள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் துணைத் திட்டமாக இங்கு நிறுவப்பட்டு வருகின்றன. லாங்கோ நிறுவனம் இம்மின்னுற்பத்தி திட்டத்திற்குத் தேவையான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராகச் செயல்பட்டு வருகிறது.

அனூப்பூர் அனல் மின் திட்டத்திற்குத் தேவையான தண்ணிரை சோன் ஆறு வழங்குகிறது. இந்திய நிலக்கரி நிறுவனம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகர் மாநிலங்களிலுள்ள தென்கிழக்கு நிலக்கரிப்புல சுரங்கங்களில் கிடைக்கும் நிலக்கரியை இம்மின் திட்டத்திற்காக வழங்குகிறது.

அனூப்பூர் அனல் மின் திட்டத்தின் முழுப்பணிகள், இலகர்பூர், முர்ரா, குவாரி, பெலியா மற்றும் யைதாரி முதலான கிராமங்கள் வரைக்கும் பரவியுள்ளது. முதல்நிலைத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழை தில்லியிலுள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்,[1] 2010 ஆம் ஆண்டு மே மாதம் வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு நிறுவனமும் இத்திட்டத்திற்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது[2].

இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 70% மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலை II[தொகு]

1320 மெகாவாட் கொள்திறன் (2X660 மெகாவாட்) அளவுள்ள மின்னுற்பத்தியை எதிர்நோக்கிய துணைத் திட்டமாக நிலை II திட்டம் இங்கு நிறுவப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2014 இல் சுற்றுச்சூழல் தடையின்மை சான்றிதழ் கோரி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

Company website http://www.hindustanpowerprojects.com/

http://www.thehindubusinessline.com/todays-paper/tp-news/hindustan-power-projects-may-look-at-initial-public-offering-next-year/article8477047.ece