அனுதிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுத்திருதம் என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் முதலாவது அங்கம் ஆகும்.

அனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. மூன்றாவது அங்கமாகிய லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.

அனுத்திருதத்தின் அட்சர காலம் ஒன்று ஆகும். இதன் குறியீடு "U" ஆகும். சப்த தாளங்களில் அனுத்திருதமானது "ஜம்பை" தாளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜம்பை தாளத்தின் குறியீடு பின்வருமாறு அமைகின்றது. " | U O ".

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுதிருதம்&oldid=2267339" இலிருந்து மீள்விக்கப்பட்டது