அதிமதுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Liquorice
Illustration Glycyrrhiza glabra0.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு Magnoliopsida
வரிசை: Fabales
குடும்பம்: ஃபேபேசியே
துணைக்குடும்பம்: Faboideae
Tribe: Galegeae
பேரினம்: Glycyrrhiza
இனம்: G. glabra
இருசொற்பெயர்
Glycyrrhiza glabra
L.[1]
வேறு பெயர்கள்
Glycyrrhiza glabra

அதிமதுரம் (liquorice) என்பது சித்த மருத்துவத்தில் “அதிமதுரம்” (”Glycyrrhiza glabra") என்ற செடியின் வேரினை குறிக்கும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

வளரியல்பு[தொகு]

செடி வகை. காடுகளில் புதர்ச்செடியாகவும் வளரும்.

தாவர விளக்கம்[தொகு]

இயற்கையாக மலைப்பகுதியில் வளரக்கூடியது. தாவரம் 1 1/2 அடி உயரம் வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ வரை நீளமானவை, சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் கிளைத்தவை. இவை சிறியதும் பெரியதுமாக, உட்புறம் மஞ்சள் நிறமாக, வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகக் காணப்படும். வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன. மேலும் இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் காஷ்மீரம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றது. அதிங்கம், அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம், ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் அதி மதுரம் பயிர்களுக்கிடையே கலைச்செடியாக வளர்கின்றது.

மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]

இலைகள் இனிப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. வேர், புண்கள், தாகம், அசதி, கண் நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சல் காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையை பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு. ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.[சான்று தேவை]


குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Glycyrrhiza glabra information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்த்த நாள் 1 ஆகசுடு 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அதிமதுரம்&oldid=1643488" இருந்து மீள்விக்கப்பட்டது