அணுவியல் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேதியியலிலும் இயற்பியலிலும் அணுவியல் கொள்கை (Atomic theory) என்பது பொருள்களின் இயல்பை விளக்கும் ஓர் அறிவியல் கொள்கை ஆகும். எல்லாப் பொருள்களையும் தொடர்ந்து சிறிய சிறிய கூறுகளாகப் பிரித்துக் கொண்டே இருக்க முடியும் என்று முன்னர் நிலவி வந்த கருத்துருவாக்கத்திற்கு எதிராக, பொருள்கள் அணு என்னும் தனித்தனி அலகுகளால் ஆனவை என்னும் கருத்தை அணுவியல் கொள்கை முன்வைக்கிறது. பழங் கிரேக்கத்தில் ஒரு தத்துவக் கருத்தாகத் தோன்றிய இக்கொள்கை, பிறகு 19-ஆம் நூற்றாண்டில் வேதியியல் துறையில் உண்டான பல கண்டுபிடிப்புகளால் அறிவியல் புலத்தினுள் நுழைந்தது. பொருள்கள் துகள்களால் ஆனதைப் போன்ற இயல்பைப் பெற்றிருப்பதை அக்கண்டுபிடிப்புகள் காட்டின.

"துளைக்கமுடியாத" என்னும் பொருளைக் கொண்ட atomos என்னும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல் தான் அணு (atom). ஆனால் 20-ஆம் நூற்றாண்டில் மின்காந்தவியல், கதிரியக்கம் போன்ற துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அணு என்பது அதற்கும் மேல் பிரிக்க முடியாத ஒன்றல்ல; உள் அணுக்கருத் துகள்களால், குறிப்பாக எதிர்மின்னி, நேர்மின்னி, நொதுமி ஆகியவற்றால் ஆனவை என்பதைக் காட்டின. இவ்வாறு அணுவைப் பிரிக்க முடியும் என்பதைக் கண்டுகொண்ட அறிவியலாளர்கள், பிறகு துளைக்க முடியாத அணுவின் கூறுகளை அடிப்படைத் துகள்கள் என்று அழைக்கலாயினர். அறிவியலில், உள் அணுக்கருத் துகள் பற்றிய பிரிவு துகள் இயற்பியல் என்று அழைக்கப் படுகிறது. இப்புலத்தில் தான் பொருள்களின் உண்மையான அடிப்படை இயல்பு பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று நம்பப் படுகிறது.

வரலாறு[தொகு]

பண்டைக்கால அணுவியல் கொள்கை[தொகு]

முற்காலச் சோதனைவழி வளர்ச்சிகள்[தொகு]

உள் அணுக்கருத் துகள்கள்[தொகு]

அணுக்கரு[தொகு]

அணுவின் கற்றை இயற்பியல் போல்மம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அணுவியல்_கொள்கை&oldid=1495722" இருந்து மீள்விக்கப்பட்டது