அணுக்கரு வெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BADGER எனப்படும் 23 கிலோடன் அணுகுண்டு, 1953 ஏப்ரல் 18 அன்று நெவாடா சோதனை தளத்தில் அணுகுண்டு சோதனைத் தொடரின் ஒரு பகுதியாக சுடப்பட்டது.

அணுக்கரு வெடிப்பு (nuclear explosion) என்பது மிக வேகமான அணுக்கரு வினையிலிருந்து வெளிவரும் வேகமான ஆற்றல் வெளிப்பாடு ஆகும். அணுக்கரு வினையானது அணுக்கருப் பிளவு, அணுக்கரு இணைவு அல்லது இவை இரண்டும் கலந்த பலகட்ட விழுத்தொடர் கலவை மூலம் நடைபெறுகிறது. அணுக்கரு இணைவை அடிப்படையாகக் கொண்ட அனைத்து ஆயுதங்களிலும் அணுக்கரு இணைவை ஏற்படுத்த அணுக்கருப் பிளவு தூண்டுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. முழுமையான அணுக்கரு இணைவு ஆயுதமானது, இன்றளவும் அனுமான அளவிலேயே உள்ளது. அணுக்கரு வெடிப்பு அணுக்கரு ஆயுதங்களிலும் அணுகுண்டு சோதனைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

வளிமண்டல அணுக்கரு வெடிப்புகளானது காளான் மேகங்களுடன் தொடர்புடையது, என்றாலும் காளான் மேகங்களைப் பெரிய வேதியியல் வெடிப்புகளால் கூட ஏற்படுத்த முடியும். இந்தக் காளான் மேகங்கள் இல்லாமல், வளிமண்டல அணுக்கரு வெடிப்பு சாத்தியமாகும். அணுக்கரு வெடிப்பானது அதிக அளவு அயனியாக்கும் கதிர்களையும் கதிரியக்கக் கழிவுகளையும் வெளிவிடும். இவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன், மிதமான முதல் கடுமையான தோல் தீக்காயங்கள், கண் பாதிப்பு, கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறிகள், கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட புற்றுநோய் அல்லது இறப்புகள் கூட ஏற்படலாம்.[1] அணுக்கரு வெடிப்புகள் சில மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை நீடிக்கும் காலநிலைத் தீங்கை விளைவிக்கும். 1983 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில், கார்ல் சேகன் ஒரு சிறிய அளவிலான அணுக்கருப் போர் வளிமண்டலத்தைப் பாதிக்கப் போதுமான துகள்களை வெளியிடலாம் என்று கூறினார், இதனால் கோள் குளிர்ச்சியடைந்து, பயிர்கள், விலங்குகள், வேளாண்மை ஆகியவை உலகம் முழுவதும் மறைந்துவிடும். இவ்வாறான விளைவு அணுப்போர் குளிர்காலம் எனப் பெயரிடப்பட்டது.[2]

அணுக்கரு ஆயுதங்கள்[தொகு]

அமெரிக்கா அணுக்கரு ஆயுதத்தை இதுவரை இரண்டு முறை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு எதிராக அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகளுக்கு லிட்டில் பாய்(சின்ன பையன்), ஃபாட் மான்(குண்டு ஆண்) என அழைத்தனர்.

லிட்டில் பாய்[தொகு]

முதல் குண்டு(யுரேனியம்-துப்பாக்கி வகை) 6 ஆகச்ட் 1945 ஆம் ஆண்டு, காலை நேரத்தில் அமெரிக்க விமானப்படையால் ஹிரோசிமா நகரத்தில் வீசப்பட்டது.அதில் 20,000 ஜப்பான் போர்வீரர்கள், 20,000 கொரிய அடிமைக் கூலிகள் உட்பட 70,000 மக்கள் கொள்ளப்பட்டனர்.

ஃபாட் மான்[தொகு]

மூன்று நாட்களுக்கு பிறகு இரண்டாவது குண்டு (புளுட்டோனிய- உள்நோக்கி வெடிக்கும் வகை) நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. இதில் 27,778 ஆயுத தளவாட அலுவலர்கள், 2,000 கொரிய அடிமைக் கூலிகள், மற்றும் 150 ஜப்பான் போர்வீரர்கள் உள்பட 39,000 பேர் கொள்ளப்பட்டனர்.

அணுக்கரு வெடிப்பின் விளைவுகள்[தொகு]

அனுக்கரு வெடிப்பு மிக பரந்த நிலப்பரப்பை, நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மனித குலத்திற்கு பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தும். கதிரியக்க மாசானது மரபணு பிறழ்வு மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது. இப்பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கு தொடரும். மற்ற வெடிகுணுகளை போல அல்லாமல், அணுக்கரு குண்டுகள் வெடிக்கதொடங்கினால், நிற்காமல் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கும். வெடிப்பின் மையப்பகுதியிலிருந்து வரும் அணுக்கரு கதிர்வீச்சு மேகம், வெப்ப அலைகள் பரவுவது நின்ற பிறகும் கூட, உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "CDC Radiation Emergencies | Frequently Asked Questions About a Nuclear Blast". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-22. பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.
  2. Rubinson, Paul (2014-01-02). "The global effects of nuclear winter: science and antinuclear protest in the United States and the Soviet Union during the 1980s" (in en). Cold War History 14 (1): 47–69. doi:10.1080/14682745.2012.759560. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-2745. http://www.tandfonline.com/doi/abs/10.1080/14682745.2012.759560. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_வெடிப்பு&oldid=3911209" இலிருந்து மீள்விக்கப்பட்டது