அணுக்கரு உருகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று மைல் தீவு அணுமின் நிலையம் ஒவ்வொன்றும் தன்னுடைய கதிர்வீச்சுப் பாதுகாப்புக் கட்டிடத்தில் அமைந்து தங்களுடைய குளிரூட்டு ஓங்குகலனுடன் இணைந்திருந்த இரு அழுத்த நீர் உலைகளைக் கொண்டிருந்தது. பகுதி உருகலைக் கண்ட இரண்டாம் உலை பின்னணியில் உள்ளது.

அணுக்கரு உருகல் அல்லது அணுக்கருப் பிளவு (nuclear meltdown) எனப் பொதுவாக வழங்கப்படும் சொல் மிகுந்த வெப்பத்தினால் கருவம் சேதப்படும்படியான கடும் அணுக்கரு உலை விபத்துக்களைக் குறிப்பிடுகிறது. இந்தச்சொல் அலுவல்முறையில் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தால் வரையறுக்கப்படவில்லை[1]. இருப்பினும் பல்லூடகங்களிலும் இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. "கரு உருகல் விபத்து" மற்றும் "பகுதி கருவம் உருகல்" என்பன ஒத்த சொற்களாயினும் அணு உலை விபத்துகளின் தீவிரம் இரண்டிலும் முற்றிலும் மாறானது.

உலையின் கருவத்தினைக் குளிர்விக்கும் அமைப்புகளில் தடங்கல் வரக்கூடிய விபத்துக்கள் அணுக்கரு உருகலுக்கு காரணமாக அமைகின்றன. காட்டாக குளிர்வி திரவத்தை கொணரும் அமைப்புகளில் ஏற்படும் விபத்துகள் கருவம் மிகுந்த வெப்பத்தினால் உருகுகின்ற வாய்ப்பிற்கு வித்திடுகின்றன. நீண்ட அரைவாழ்வுக் காலமும் கொல்கின்ற அபாயமும் கொண்ட செறிவான கதிரியக்கப் பொருள்களை சுற்றுச்சூழலில் வெளியிடும் வாய்ப்பு உள்ளதால் அணுக்கரு உருகல் மிகக் கடுமையான விபத்தாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. International Atomic Energy Agency (IAEA) (2007). IAEA Safety Glossary: Terminology Used in Nuclear Safety and Radiation Protection (2007edition ). Vienna, Austria: International Atomic Energy Agency. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9201007078. http://www-pub.iaea.org/MTCD/publications/PDF/Pub1290_web.pdf. பார்த்த நாள்: 2009-08-17. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_உருகல்&oldid=3231130" இலிருந்து மீள்விக்கப்பட்டது