அட்லூரி சிறீமன் நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்லூரி சிறீமன் நாராயணா
Atluri Sriman Narayana
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிபல் மருத்துவர்
விருதுகள்பத்மசிறீ
பிதான் சந்திரா ராய் விருது
விசிசுட்ட புராசுகார்
Dr. பைடி லட்சுமய புராசுகார்
தானா சிறப்பு விருது
பேம்டெண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது

அட்லூரி சிறீமன் நாராயணா (Atluri Sriman Narayana) ஓர் இந்திய பல் அறுவை சிகிச்சை நிபுணராவார். ஐதராபாத் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் ஆந்திர மாநில சுகாதார சேவை அமைப்பின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.[1]. 1974ஆம் ஆண்டு முதல் ஆந்திராவில் உள்ள கிராமங்கள் முழுவதும் இவர் இலவச பல் சிகிச்சை முகாம்கள் நடத்தி புகழ் பெற்றார்.[2][3]. சாய் வாய்வழி சுகாதார அடித்தளம் என்ற ஓர் அமைப்பை இவர் நிறுவினார். இதன் கீழ் இவர் மாநிலத்தின் பல்வேறு கிராமப்புறங்களுக்கு வாராந்திர பயணங்களை மேற்கொண்டு, மருத்துவ முகாம்களை நடத்தினார். கிராமப்புற மக்களுக்கு வாய்வழி சுகாதாரம் குறித்து கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் விரிவுரைகளை வழங்குகிறார். இவரது முயற்சிகள் 20,000 பள்ளிகளில் கல்வி கற்கும் 1.5 மில்லியன் குழந்தைகளை எட்டியதாகக் கூறப்படுகிறது.[2][3].

விருதுகள்[தொகு]

இந்தியாவில் மருத்துவ துறையினருக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் 1989ஆம் ஆண்டு நாராயணாவுக்கு வழங்கி சிறப்பித்தது. ஆந்திரப் பிரதேச அரசு இவருக்கு 1999ஆம் ஆண்டு விசிசுட்ட புராசுகார் விருதை வழங்கியது. மருத்துவர் பைடி இலட்சுமையா அறக்கட்டளை வழங்கும் மருத்துவர் பைடி லட்சுமய புராசுகார் விருது, 2009ஆம் ஆண்டில் தானா சிறப்பு விருது, 2010ஆம் ஆண்டில் பேம்டெண்டு அமைப்பு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற விருதுகள் பலவற்றையும் நாராயணா பெற்றுள்ளார்.[1] 2002ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4].

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நாராயணர் இந்தியாவின் ஐதராபாத்தில் வாழ்ந்த சிறீ இராமலட்சுமியை மணந்தார். இவரது மூத்த மகன் சாய்ராம் அட்லூரி சிடெம்கியூர் Stemcures மருத்துவ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். சின்சினாட்டி நகரத்தில் வலி நிவாரண மருத்துவராக பணிபுரிகிறார். இளைய மகன் மோகன் அட்லூரி ஐதராபாத்தில் பயிற்சி பெற்ற ஒரு முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அட்லூரி சிறீமன் நாராயணாவுக்கு திரிசா அட்லூரி, தேயா அட்லூரி, நீல்சாய் அட்லூரி என்ற மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "My Doc Advisor". My Doc Advisor. 2014. Archived from the original on 12 January 2015. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  2. 2.0 2.1 "Devnet". Devnet. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  3. 3.0 3.1 "India Today". India Today. 4 March 2002. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  4. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லூரி_சிறீமன்_நாராயணா&oldid=3772730" இலிருந்து மீள்விக்கப்பட்டது