அடல் பிகாரி வாச்பாய் இந்தி விசுவவித்யாலயா

ஆள்கூறுகள்: 23°22′01″N 77°27′40″E / 23.367°N 77.461°E / 23.367; 77.461
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடல் பிகாரி வாச்பாய் இந்தி விசுவவித்யாலயா
வகைபொது
உருவாக்கம்2011
வேந்தர்மத்தியப் பிரதேச ஆளுநர்
துணை வேந்தர்இராம்தேவ் பரத்வாஜ்[1]
அமைவிடம், ,
இந்தியா
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.abvhv.edu.in

அடல் பிகாரி வாச்பாய் இந்தி விசுவவித்யாலயா (Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது 2011 திசம்பரில் நிறுவப்பட்டது.[2] இந்தி கவிஞரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாச்பாயின் நினைவாக இப்பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.[3] மோகன் லால் சிப்பா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆவார்.[3]

வளாகம்[தொகு]

2016ஆம் ஆண்டு நிலவரப்படி, பல்கலைக்கழகம் இரண்டு வாடகை கட்டிடங்களில் தற்காலிகமாகச் செயல்பட்டது. பழைய மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றது. மத்தியப் பிரதேச முங்காலியா கோட் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நிர்வாகப் பணிகள் நடைபெற்று வந்தது. முங்காலியா கோட்டில் 50 ஏக்கர் (0.20 கிமீ2) பரப்பளவில் பல்கலைக்கழகத்திற்காக கட்டிடங்கள் கட்ட 2013-ல் பணிகள் துவங்கியது.[4]

இந்தி மொழி[தொகு]

இப்பல்கலைக்கழகம் இந்தி மொழி கல்வியினை ஊக்குவிக்கிறது. 2015ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகத்திடம் இளநிலை மருத்துவப் பாடத்தின் பாடத் தாள்களை இந்தியில் எழுத அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.[2] இருப்பினும் 2017ஆம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததன் காரணமாகவும் உள்கட்டமைப்பு காரணமாகவும் இத்திட்டத்தை நிறுத்துவது குறித்து பல்கலைக்கழகம் பரிசீலித்தது.[5]

படிப்புகள்[தொகு]

நவம்பர் 2020-ல், பல்கலைக்கழகம் முதலுதவி சிறப்புப் பட்டப் படிப்பினை தில்லியின் இந்திய முதலுதவி குழுவுடன் இணைந்து பிற முதலுதவி படிப்புகளுடன் வழங்கியது.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]