அசோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Azolla caroliniana0.jpg

அசோலா (ஆங்கிலம் : Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுகிறது.

அமைப்பு[தொகு]

மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது.மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும்.இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை.பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

சத்துக்கள்[தொகு]

இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் 7 முதல் 10 விழுக்காடு வரையும் , தாது உப்புகள் 10 முதல் 15 விழுக்காடு வரையும் , வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.

பயன்கள்[தொகு]

  • அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
  • அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது.
  • நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
  • அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசோலா&oldid=1397259" இருந்து மீள்விக்கப்பட்டது