அசைலைதரசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசைலைதரசீன் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டு, இது அசைலைதரசைடு, அசிட்டோ ஐதரைசைடு அல்லது அசிட்டிக் அமில ஐதரசைடு என அழைக்கப்படுகிறது.[1]

அசைலைதரசீன் (Acylhydrazine) ஓர் அமைடை ஒத்த கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆனால் கார்பாக்சிலிக் அமிலத்திலுள்ள -OH பகுதி மட்டும் ஐதரசீனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. அசைலைதரசீன்கள் ஒரு வகையான ஐதரசைடுகள் ஆகும்.

வேதித்தொகுப்பு வினைகளில் அசைலைதரசீன்கள் இடைநிலைப் பொருட்களாகும். உதாரணமாக சனிடினிப் (C22H27FN4O2) தொகுப்பு வினையில் 5-புளோரோயிசாட்டின் கலக்கும்போது மெல்ல ஐதரசீன் ஐதரேட்டு உருவாகிறது. நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் 110° செல்சியசு வெப்பநிலையில் இண்டோல் வளைய கட்டமைப்பு உடைகிறது [2]. (அமினோ-5-புளோரோ-பீனைல்)-அசிட்டிக் அமில ஐதரசைடு, 3-வது நிலையில் கீட்டோன் ஒடுக்கத்துடன் உடைந்து, அடுத்தடுத்து வலிமையான அமிலத்தில் பதனிடும்போது இம்மருந்துக்குத் தேவையான 1,3-டையைதரோ-2-ஆக்சோ இண்டோல் கட்டமைப்பு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ChemicalBook:2-(4-ethylphenoxy)acetylhydrazide".
  2. "US patent 6573293".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசைலைதரசீன்&oldid=2748328" இலிருந்து மீள்விக்கப்பட்டது