அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி
Ball-and-stick model of the acetic oxalic anhydride molecule
இனங்காட்டிகள்
19037-85-5 Y
ChemSpider 25991421 Y
InChI
  • InChI=1S/C6H6O6/c1-3(7)11-5(9)6(10)12-4(2)8/h1-2H3 Y
    Key: XRMBFFGBVGXJJF-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CC(OC(C(OC(C)=O)=O)=O)=O
பண்புகள்
C6H6O6
வாய்ப்பாட்டு எடை 174.11 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி (Acetic oxalic anhydride) C6H6O6 என்ற வேதியியல் வாய்ப்பாடும் (H3C-(C=O)-O-(C=O)-)2 என்ற கட்டமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இச்சேர்மம் ஒரு கலப்பு நீரிலி வகையாகப் பார்க்கப்படுகிறது. முன்னர் 2:1 என்ற மூலக்கூற்று விகிதத்தில் அசிட்டிக் அமிலமும் (H3C-(C=O)OH), ஆக்சாலிக் அமிலமும் ((-(C=O)OH)2) சேர்ந்து இரண்டு நீர் மூலக்கூறுகளை இழப்பிற்குப் பின் அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலியை மற்ற சில நீரிலிகளைப் போல நேரடியாக அமிலங்களிலில் இருந்து தயாரிக்க முடியாது. 1953 ஆம் ஆண்டு டபிள்யூ. எட்வார்டும் டபிள்யூ.எம். என்லெயும் தொகுப்பு முறையில் இச்சேர்மத்தைத் தயாரித்தனர். இதற்காக −5 ° செல்சியசு வெப்பநிலையில், டை எத்தில் ஈதர் உடன் அசிட்டைல் குளோரைடு சேர்த்து இதனுடன் வெள்ளி ஆக்சலேட்டை வினைபுரியச்செய்தார்கள். பின்னர், குறைவான அழுத்தத்தில் கரைப்பானை காய்ச்சி வடித்து அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலியை தயாரித்தனர். நீரற்ற ஆக்சாலிக் அமிலத்தை கீட்டினுடன் (H2C=C=O) சேர்த்தும் இதைத் தயாரிக்க முடியும்[1].

பண்புகள்[தொகு]

அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி நிறமற்ற, நிலைப்புத்தன்மையற்ற ஒரு படிகத் திண்மம் ஆகும். டை எத்தில் ஈதரில் கரையும். −3 ° செல்சியசு வெப்பநிலையில் அசிட்டிக் நீரிலி (H3C-(C=O)-)2O , கார்பனீராக்சைடு (CO 2), கார்பனோராக்சைடு (CO) சேர்மங்களாகச் சிதைவடையும். நீருடன் சேர்ந்து அசிட்டிக் அமிலமாகவும், ஆக்சாலிக் அமிலமாகவும் நீராற்பகுப்பு அடைகிறது [1]. நீரற்ற ஆக்சாலிக் அமிலத்தை அசிட்டிக் நீரிலியால் சிதைக்கும் போது ஓர் இடைநிலைச் சேர்மமாக அசிட்டிக் ஆக்சாலிக் நீரிலி இருக்கக்கூடுமென்றும் ஊகிக்கப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 W. R. Edwards and Walter M. Henley (1953), Acetic Oxalic Anhydride. J. Am. Chem. Soc., volume 75, issue 14, pages 3857-3859. எஆசு:10.1021/ja01110a505

இவற்றையும் காண்க[தொகு]