அக்கா சுபலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கா சுபலெட்சுமி (1886 - 1969) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுரிமை போராளிகளுள் ஒருவர்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் திருவாரூர் மாவட்டம் ரிஷியூரில் 1886 ஆம் ஆண்டு சுப்பிரமணிய அய்யருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தார். சுபலட்சுமிக்கு 11 வயதாகும் பொழுது 15 வயது சிறுவன் ஒருவனை மணமுடித்து வைத்தனர் பெற்றோர்கள். மூன்று மாதங்களில் அச்சிறுவன் மரணமடைய பல துயரங்கள் அடைந்தார். தந்தையின் முயற்சியால் படிப்பை தொடர்ந்ததுடன் 1905 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். 1908 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டதாரியானார்.

மருத்துவப் பணிகள்[தொகு]

1912 ஆம் ஆண்டு இளம் விதவைகளுக்கு கல்வியும், மறுவாழ்வும் அளிக்கக்கூடிய 'ஸ்ரீ சாரதா ஐக்கிய சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்த ஆசிரமத்தின் ஆஸ்தான மருத்துவராகச் சேவையாற்றினார். இதனால் பல விதவைகள் பலனடைந்தனர். 1922 ஆம் ஆண்டு இந்த அமைப்புக்காக அப்போதைய அரசு 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டிக் கொடுத்தது. இந்த கட்டடத்தில் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபுவின் மனைவி லேடி வெலிங்டன் பெயரைக் கொண்டு பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.

மறைவு[தொகு]

ஆங்கில அரசு இவரது சேவையினைப் பாராட்டி 'கேசரி ஹிந்து' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1969 ஆம் ஆண்டு தமது 82 வது வயதில் மறைந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பைம்பொழில் மீரான் (2015). தோழமை வெளியீடு. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கா_சுபலட்சுமி&oldid=3034512" இலிருந்து மீள்விக்கப்பட்டது