அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய நூல்களில் ஒன்று. [1] இதில் உள்ள ஒரு பாடல்:

தருமை வளர் குமரகுரு முனிவன் கல்வி

சார் பகழிக்கூத்தன் எனத் தரணியோர் சொல்

இருவருமே நன்கு பிள்ளைத்தமிழைச் செய்தற்கு

ஏற்றவர் என்றிடும் உரை வெந்திட்டது அம்மா

அருமை பெறு காவை அகிலாண்ட வல்லி

அம்மை மேல் மேற்படி நற்றமிழை ஆய்ந்து

சுருதி தவறாத குணன் மீனாட்சி

சுந்தரம் மால் அன்பினொடு சொல்லும்போதே



சபாபதி முதலியார் என்பவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை மழவை மகாலிங்க ஐயரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த ஐயர் அவர் காலத்தில் பெரிய தமிழ் வித்துவான். மீனாட்சி சுந்தரம் பிள்ளை தம் அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் நூலிலிருந்து மேலே கண்ட பாடலைப் பாடினார். ஐயர் இந்தப் பாடலை மூன்று முறை திரும்பத் திரும்பப் பாடச்சொல்லி மகிழ்ந்தாராம்.

மேற்கோள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005 - பக்கம் 56