அகநாழிகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகநாழிகை தமிழ் நாட்டில் வெளியாகும் ஒரு சமூக கலை இலக்கிய இதழ். இது அக்டோபர் 2009 முதல் வெளிவருகிறது. புதிய படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிப்பதையும், ஏற்கனவே எழுதிவரும் தமிழின் சிறந்த படைப்பாளுமைகளின் படைப்புகளை வெளியிடுவதிலும் அகநாழிகை கவனம் செலுத்துகிறது. இதன் ஆசிரியர் பொன். வாசுதேவன். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகத்திலிருந்து வெளியாகிறது.
பொருளடக்கம் |
[தொகு] அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்
அகநாழிகை பதிப்பகம் 2009 ல் துவங்கப்பட்டது. புதிய படைப்பாளிகளை இனங்கண்டு அடையாளப்படுத்தும் முயற்சியாக புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தனித்துவமாக எழுதிவரும் படைப்பாளிகளின் முதல் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.[1]
[தொகு] கவிதைத் தொகுதிகள்
- கருவேல நிழல் - பா.ராஜாராம் (பக்.64)
- கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (பக்.64)
- நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன் (பக்.64)
- கூர்தலறம் - TKB காந்தி (பக்.64)
- உறங்கி விழித்த வார்த்தைகள் - மதன் (பக்.64)
- தலை நிமிர்வு (தமிழிய தலித்திய கவிதைகள்) - பாரதி வசந்தன் (பக்.205)
- பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன் (பக்.72)
- ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - செல்வராஜ் ஜெகதீசன் (பக்.62)
- மயிரு - யாத்ரா (பக்.80 )
[தொகு] சிறுகதைத் தொகுதி
1. அய்யனார் கம்மா - நர்சிம் (பக்.72)