ஃபிலத்தீனோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஃபிலத்தீனோ | |
|---|---|
| Location of ஃபிலத்தீனோ in Italy | |
| அமைவு: | |
| நாடு | இத்தாலி |
| மண்டலம் | |
| மாகாணம் | |
| பரப்பளவு | |
| - கொம்யூன் | 77.5 கிமீ² (29.9 ச. மைல்) |
| ஏற்றம் | 1,063 மீ (3,488 அடி) |
| மக்கள் தொகை (திசம்பர் 2004) | |
| - கொம்யூன் | 542 |
| அஞ்சல் குறியீடு | 03010 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 0775 |
| பாதுகாவல் புனிதர் | சான் பெர்னார்டீனோ டா சியேனா |
| புனிதர் நாள் | மே 20 |
| இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம் | |
ஃபிலத்தீனோ (Filettino) என்பது இத்தாலியில் ரோமிலிருந்து கிழக்காக 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைப் பிராந்திய நகரமும், அங்கீகரிக்கப்படாத ஒரு சமத்தானம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1063 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள ஃபிலத்தீனோ 77.5 சதுரகிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. இங்குள்ள மக்கள் தொகை திசம்பர் 2004 இல் 542 ஆகும். இத்தாலிய நகரான ஃபிலத்தீனோ சமஸ்தானத்தின் மேயர் லூக்கா செல்லாரி. இவர் தமது சமஸ்தானத்தை செப்டம்பர் 2011 இல் தனிநாடாக அறிவித்து விடுதலைப் பிரகடனம் செய்துள்ளார்[1] [2]. ஃபியரீத்தோ என்ற பெயரில் தனியான நாணயத் தாளும் அச்சிட்டப்பட்டுள்ளது.
உசாத்துணை[தொகு]
- ↑ ரோம்: ஃபீலத்தீனோ சுதந்திரப் பிரகடனம்,
- ↑ Filettino declares independence from Italy in protest at Silvio Berlusconi's cuts ,