ஃபாக்சு பீ2
ஃபாக்சு பீ2 என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று வோல்ஃப் எனார்ட் என்ற ஆராய்ச்சியாளரால் கருதப்படும் ஒரு மரபணுவாகும்.
பொருளடக்கம் |
விவரங்கள் [தொகு]
மாக்சு பிளாங்க் கூர்த்தலற மானுடவியல் கழகத்தைச்(Max Planck Institute of Evolutionary Anthropology) சேர்ந்தவர் வோல்ஃப் எனார்ட். இவர் மனிதனின் மொழி பேசும் திறன் அளித்த பல மரபணுக்களில் முதல் மரபணுவை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டார்.[1] கடந்த இரண்டு லட்சமாண்டுகளில் அந்த மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களே மாந்தனின் கூர்த்தலற வளர்ச்சிக்கு ஊந்துசக்தியாக பயன்பட்டது. மாந்த அறிவாற்றலுடன் இம்மரபணு உறுதியான தொடர்புடையது. இதன் மூலம் மாந்தனின் முதல் மொழியை கண்டறிய விளைவு பிறந்துள்ளதாக நம்புகின்றனர்.
தனித்தமிழ் இயக்கம் [தொகு]
பாவாணர் என்ற மொழி வல்லுநரின் அடியொற்றி நடந்துவரும் இரா. மதிவாணன் என்பவர் மொழி அகழ்வாரய்ச்சி என்ற துறையில் ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று கருதுகிறார். இதன் மூலம் முதன் மொழியில் பொதுவான வேர்களைக் கொண்டுள்ள பல மொழிகளின் உள்ள சொற்களை இணங்காணலாம் என்று அவர் கருதுகிறார்.
மூலம் [தொகு]
- தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Nature magazine, 14 - 9 -2002