கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
Appearance
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2001 |
முதல்வர் | முனைவர் நாகராஜன் முனுசாமி |
அமைவிடம் | 93 காமராஜர் சாலை, உப்பிலிபாளையம், சிங்காநல்லூர்- 641015 77°1′10.954″N 11°0′36.95″E / 77.01970944°N 11.0102639°E |
இணையதளம் | www |
கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஆங்கிலம்:KSG College of Arts and Science) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. கே.எஸ். கீதா என்பவர் தனது பெயரில் 1997 ஜூலை 4 ஆம் நாள் கே. எஸ். ஜி. கல்வி அறக்கட்டளையினைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் மூலம் 2001 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டது.[1]
பட்டப்படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் முதுகலைப் படிப்பும் உள்ளன.
- இளங்கலை கணினிப் பயன்பாடு
- இளங்கலை வணிகவியல்
- இளங்கலை கணினி அறிவியல்
- இளங்கலை தகவல்தொழில்நுட்பம்
- இளங்கலை பல்லூடகம் மற்றும் இணையத் தொழில்நுட்பம்
- இளங்கலை உயிரித் தொழில்நுட்பம்
- இளங்கலை உணவுத் தயாரிப்பு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மை
- இளங்கலை மின்னணுவியல் மற்றும் தொடர்பு சாதனங்கள்
- இளங்கலை கணிதம்
- இளங்கலை ஆங்கில இலக்கியம்
- இளங்கலை தொழில் நிர்வாகவியல்
- இளங்கலை உளவியல்
- முதுகலை ஆங்கில இலக்கியம்
- முதுகலை தகவல் தொழில்நுட்பம்
- முதுகலை கணிதம்
- முதுகலை உயிரித் தொழில்நுட்பம்
- முதுகலை வணிகவியல்
வெளியிணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தன்விவரக் குறிப்பு". ksgcollege. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.