புரோமித்தியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமித்தியம்(III) புரோமைடு
Promethium(III) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமித்தியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
14325-78-1 Y
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pm+3].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
PmBr3
வாய்ப்பாட்டு எடை 385
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமித்தியம்(III) புளோரைடு
புரோமித்தியம்(III) குளோரைடு
புரோமித்தியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நியோடிமியம்(III) புரோமைடு
சமாரியம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமித்தியம்(III) புரோமைடு (Promethium(III) bromide) என்பது PmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியத்தின் புரோமைடு உப்பாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் கதிரியக்கப்பண்பு கொண்டதாகும்.

தயாரிப்பு[தொகு]

ஐதரசன் புரோமைடுடன் புரோமித்தியம்(III) ஆக்சைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து புரோமித்தியம்(III) புரோமைடு தயாரிக்கப்படுகிறது:[1]

Pm2O3 + 6 HBr —500℃→ 2 PmBr3 + 3 H2O

புரோமித்தியம்(III) புரோமைடு நீரேற்றை சூடுபடுத்தி நீரிலி வடிவத்தை பெற இயலாது. மாறாக, இது தண்ணீருடன் சேரும்போது சிதைவடைந்து புரோமித்தியம் ஆக்சிபுரோமைடாக உருவாகிறது:[2]

PmBr3 + H2O(g) → PmOBr + 2 HBr

மேற்கோள்கள்[தொகு]

  1. W. R. Wilmarth, G. M. Begun, R. G. Haire, et al. Raman spectra of Pm2O3, PmF3, PmCl3, PmBr3 and PmI3. Journal of Raman Spectroscopy, 2005. 19(4)
  2. V Wishnevsky, W Theissig, F Weigel. The vapor phase hydrolysis of lanthanide(III) bromides IV: Heat and free energy of the reaction PmBr3 + H2O = PmOBr + 2 HBr. Journal of the Less Common Metals. 1984, 99(2): 321-329. doi:10.1016/0022-5088(84)90230-3