பீனைல் ஐதராக்சிலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனைல் ஐதராக்சிலமீன்
Skeletal formula of phenylhydroxylamine
Ball-and-stick model of the phenylhydroxylamine molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
என்- பீனைல் ஐதராக்சிலமீன்
வேறு பெயர்கள்
பீட்டா- பீனைல் ஐதராக்சிலமீன், என்-ஐதராக்சி அனிலின்; என்-ஐதராக்சிபென்சீன் அமீன்; ஐதராக்சிலமினோபென்சீன்
இனங்காட்டிகள்
100-65-2 Y
ChEBI CHEBI:28902 N
ChemSpider 7237 N
EC number 209-711-2
InChI
  • InChI=1S/C6H7NO/c8-7-6-4-2-1-3-5-6/h1-5,7-8H N
    Key: CKRZKMFTZCFYGB-UHFFFAOYSA-N N
  • InChI=1/C6H7NO/c8-7-6-4-2-1-3-5-6/h1-5,7-8H
    Key: CKRZKMFTZCFYGB-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02720 N
பப்கெம் 7518
  • ONC1=CC=CC=C1
UNII 282MU82Z9A N
பண்புகள்
C6H7NO
வாய்ப்பாட்டு எடை 109.1274 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற ஊசிகள்
உருகுநிலை 80 முதல்[convert: unknown unit]
-68.2•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பீனைல் ஐதராக்சிலமீன் (Phenylhydroxylamine) என்பது C6H5NHOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஏற்ற ஒடுக்கத்துடன் தொடர்புடைய இணைகளான அனிலின் (C6H5NH2) மற்றும் நைட்ரோசோபென்சீன் C6H5NO சேர்மங்களுக்கிடையிலான ஓர் இடைநிலை என்று இது வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

நைட்ரோபென்சீனை அமோனியம் குளோரைடு முன்னிலையில் துத்தநாகத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பீனைல் ஐதராக்சிலமீன் உருவாகிறது. [1][2] மாற்றாக, நைட்ரோபென்சீனை ஐதரசீனை ஓர் ஐதரசன் மூலப்பொருளாகப் பயன்படுத்தி ரோடியம் வினையூக்கியின் மீது செலுத்தி மாற்று ஐதரசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம். [3]

வினைகள்[தொகு]

வெப்பப்படுத்தினால் பீனைல் ஐதராக்சிலமீன் நிலைப்புத்தன்மையை இழக்கிறது. மேலும் வலிமையான அமிலங்களின் முன்னிலையில் பாம்பெர்கெர் மறுசீராக்கல் வினை வழியாக 4-அமினோபீனோலாக எளிதில் மறுசீரமைப்பு அடைகிறது. டைகுரோமேட்டுடன் பீனைல் ஐதராக்சிலமீன் சேர்க்கப்படும்போது ஆக்சிசனேற்ற வினைக்கு உட்பட்டு நைட்ரோசோபென்சீன் உருவாகிறது.

பீனைல் ஐதராக்சிலமீனுடன் பென்சால்டிகைடு சேர்க்கப்படும்போது நன்கு அறியப்பட்ட 1,3-டைபோலான டைபீனைல்நைட்ரோன் உருவாகிறது.

C6H5NHOH + C6H5CHO → C6H5N(O)=CHC6H5 + H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. E. Bamberger “Ueber das Phenylhydroxylamin” Chemische Berichte, volume 27 1548-1557 (1894). E. Bamberger, "Ueber die Reduction der Nitroverbindungen" Chemische Berichte, volume 27 1347-1350 (1894) (first report).
  2. O. Kamm (1941). "Phenylhydroxylamine". Organic Syntheses 4: 57. doi:10.15227/orgsyn.004.0057. 
  3. P. W. Oxley, B. M. Adger, M. J. Sasse, M. A. Forth (1989). "N-Acetyl-N-Phenylhydroxylamine via Catalytic Transfer Hydrogenation of Nitrobenzene using Hydrazine and Rhodium on Carbon". Organic Syntheses 67: 187. doi:10.15227/orgsyn.067.0187. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைல்_ஐதராக்சிலமீன்&oldid=2968286" இலிருந்து மீள்விக்கப்பட்டது