தெலூரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலூரிக் அமிலம்
ஆர்த்தோ தெலூரிக் அமிலத்தின் கட்டமைப்பு
பந்து-குச்சி ஒப்புரு of ortho-telluric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சா ஐதராக்சிடோ தெலூரியம்
வேறு பெயர்கள்
Orthotelluric acid, Tellurium(VI) hydroxide
இனங்காட்டிகள்
7803-68-1 N
ChEBI CHEBI:30463 Y
ChemSpider 55517 Y
InChI
  • InChI=1S/H2O4Te/c1-5(2,3)4/h(H2,1,2,3,4) Y
    Key: XHGGEBRKUWZHEK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/H2O4Te/c1-5(2,3)4/h(H2,1,2,3,4)
    Key: XHGGEBRKUWZHEK-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62686
SMILES
  • O[Te](O)(O)(O)(O)O
பண்புகள்
H6O6Te
வாய்ப்பாட்டு எடை 229.64 கி/மோல்
தோற்றம் வெண்மையான ஒற்றைசாய்வு படிகங்கள்
அடர்த்தி 3.07 கிசெ.மீ3
உருகுநிலை 136 °C (277 °F; 409 K)
50.1 கி/100 மி.லி 30 °செல்சியசில்[1]
காடித்தன்மை எண் (pKa) 7.68, 11.0 18 °செல்சியசில்[1]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐதரசன் தெலூரைடு
தெலூரசு அமிலம்
ஐதரசன் தெலூரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தெலூரிக் அமிலம் (Telluric acid) என்பது Te(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் அமிலமாகும். இச்சேர்மம் எண்முக வடிவிலான Te(OH)6 மூலக்கூறுகளால் ஆன ஒரு வெண்மை நிறம் கொண்ட ஒரு திண்மமாகும். இம்மூலக்கூறு நீரிய கரைசல்களில் காணப்படுகிறது[2]. இவ்விரண்டு வகையான தெலூரிக் அமிலக் கட்டமைப்புகளும் எண்முக வடிவிலான Te(OH)6 மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளன[3]. தெலூரிக் அமிலம் வலிமை குறைந்த ஒரு அமிலம் ஆகும். நீருடன் சேர்க்கப்படும்போது இவ்வமிலம் இரண்டு ஐதரசன் அணுக்களை விடுவிப்பதால் இதை இருகார அமிலம் என்றும் வகைப்படுத்தலாம். தெலூரிக் அமிலம் வலிமையான காரங்களுடன் வினைபுரிந்து தெலுரேட்டு உப்புகளை கொடுக்கிறது. இதேபோல வலிமை குறைந்த காரங்களுடன் வினைபுரிந்து ஐதரசன் தெலூரேட்டுகளையும் இது கொடுக்கிறது. நீருடன் சேர்க்கப்பட்டு நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினாலும் ஐதரசன் தெலூரேட்டுகள் உருவாகின்றன[3][4].

தயாரிப்பு[தொகு]

தெலூரியம் அல்லது தெலூரியம் டையாக்சைடு உடன் ஐதரசன் பெராக்சைடு, குரோமியம் டிரையாக்சைடு அல்லது சோடியம் பெராக்சைடு போன்ற வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களில் ஒன்றை சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதால் தெலூரிக் அமிலத்தை உற்பத்தி செய்ய முடியும்.[3]

TeO2 + H2O2 + 2H2O → Te(OH)6

தெலூரிக் அமிலக் கரைசலை 10 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் படிகமாக்கினால் Te(OH)6.4H2O. உருவாகிறது.[2] வேதியியல் இயக்கவியல் ரீதியில் இதன் ஆக்சிசனேற்றம் மெதுவாக நிகழ்கிறது என்றாலும் கீழ்காண் வினைக்காக மின்வாய் அழுத்தத்தால் இது ஆக்சிசனேற்றம் அடைகிறது[3]

H6TeO6 + 2H+ + 2e ⇌ TeO2 + 4H2O Eo = +1.02 வோல்ட்டு

குளோரின் உடன் ஒப்பிடும்போது அதன் மின்வாய் அழுத்தம் +1.36 வோல்ட்டு ஆகும். இதேபோல ஆக்சிசனேற்ற நிபந்தனைகளில் செலீனசு அமிலத்தின் மின்வாய் அழுத்தம் +0.74வோல்ட்டு ஆகும்..

பண்புகளும் வினைகளும்[தொகு]

100 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரற்ற தெலூரிக் அமிலம் காற்றில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் இவ்வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இது நீர்நீக்கம் அடைந்து வெண்மை நிறமான நீருறிஞ்சும் தூளான பல்மெட்டா தெலூரிக் அமிலமாக மாறுகிறது. தோராயமாக இதன் இயைபு (H2TeO4)10) ஆகும். இதேபோல அறியப்படாத கட்டமைப்பிலுள்ள ஓர் அமிலப் பாகான மாற்று தெலூரிக் அமிலமாகவும் மாறுகிறது. தோராயமாக இதன் இயைபு (H2TeO4)3(H2O)4).[2]
தெலூரிக் அமிலத்தின் குறிப்பிட்ட சில உப்புகள் [Te(O)(OH)5] மற்றும் [Te(O)2(OH)4]2− என்ற வாய்ப்பாட்டிலுள்ள எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளன. (TeO42−) தெலூரேட்டு அயனிகளின் இருப்பு Rb6[TeO5][TeO4] அணைவின் திண்ம நிலைக் கட்டமைப்பு உறுதி செய்கிறது.[5] 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வலிமையாகச் சூடாக்கும்போது தெலூரியம் டிரையாக்சைடின் ஆல்பா நிலை படிகம் (α-TeO3) உருவாகிறது[4]. டையசோமீத்தேன் உடன் வினைபுரிந்து இது எக்சாமெத்தில் எசுத்தரை (Te(OMe)6) தருகிறது.[2]

தெலூரிக் அமிலமும் அதன் உப்புகளும் பெரும்பாலும் எக்சா ஒருங்கிணைப்பு தெலூரியம் அணுக்களைக் கொண்டுள்ளன[3] மக்னீசியம் தெலூரேட்டு (MgTeO4) போன்ற உப்புகளுக்கும் இது பொருந்தும். மக்னீசியம் தெலூரேட்டு மக்னீசியம் மாலிப்டேட்டுடன் ஒத்த சமகட்டமைப்பும் TeO6 எண்முகத்தையும் கொண்டிருக்கிறது[3].

பிற வடிவங்கள்[தொகு]

கந்தக அமிலத்தின் அமைப்பை ஒத்த தெலுரியத்தின் வடிவம் ஏதும் அறியப்படவில்லை. (H2TeO4)3(H2O)4, என்ற தோராய இயைபு கொண்ட மாற்று தெலூரிக் அமிலம் முழுவதுமாக வரையறுக்கப்படவில்லை. அனேகமாக இது Te(OH)6 மற்றும் (H2TeO4)n போன்ற சேர்மங்களின் கலவையாக இருக்கலாம் [2].

பிற தெலுரிக் அமிலங்கள்[தொகு]

தெலூரசு அமிலத்தில் (H2TeO3) தெலூரியம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளதென அறியப்பட்டாலும் இதுவும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. ஐதரசன் தெலூரைடு வாயு நிலையில் உள்ளது. நிலைப்புத்தன்மையற்ற இதனுடன் தண்ணீரை சேர்த்தால் ஐதரோதெல்லூரிக் அமிலம் உருவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), போகா ரேடான், புளோரிடா: CRC Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 எஃப். ஆல்பர்ட் காட்டன்; சாப்ரி வில்கின்சன்; கார்லோசு முரில்லோ; மேன்பிரட் பாக்மன் (1999), Advanced Inorganic Chemistry (6வது ed.), நியூ யார்க்கு: வைலி-இன்டசயின்சு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-19957-5
  4. 4.0 4.1 Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  5. Catherine E. Housecroft; Alan G. Sharpe (2008). "Chapter 16: The group 16 elements". Inorganic Chemistry, 3rd Edition. Pearson. p. 526. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-175553-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரிக்_அமிலம்&oldid=2861064" இலிருந்து மீள்விக்கப்பட்டது