பொன்காளி அம்மன் கோவில்

ஆள்கூறுகள்: 11°07′36″N 77°48′28″E / 11.1266°N 77.8078°E / 11.1266; 77.8078
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்காளி அம்மன் கோவில்
Ponkaliyamman Temple
பொன்காளி அம்மன் கோவில் Ponkaliyamman Temple is located in தமிழ் நாடு
பொன்காளி அம்மன் கோவில் Ponkaliyamman Temple
பொன்காளி அம்மன் கோவில்
Ponkaliyamman Temple
பொன்காளி அம்மன் கோயில், சிவகிரி, ஈரோடு, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°07′36″N 77°48′28″E / 11.1266°N 77.8078°E / 11.1266; 77.8078
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:தலையநல்லூர், சிவகிரி
சட்டமன்றத் தொகுதி:மொடக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:ஈரோடு
ஏற்றம்:199.03 m (653 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பொன்காளி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பொன்காளி அம்மன் திருக்கோவில் (Ponkaliyamman Temple) தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சிவகிரி, தலையநல்லூரில் அமைந்துள்ளது. [1][2] இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3] இக்கோவில் முறையே கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் மற்றும் கூறைகுல மற்றும் விளையன்குல கொங்கு வேளாளர் கவுண்டர்கள் குல தெய்வமாக வணங்கப்படுகிறது.

வருடம் தோறும் பங்குனி மாதம் இக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. இக்கோவில் விழாவின் சிறப்பாக புதன் கிழமை இரவு நடைபெறும் குதிரை துளுக்குபிடித்தல், தேர் இழுத்தல், தீப்பந்தம் பிடித்தல் நிகழ்ச்சிகளில் பெருமளவு மக்கள் கலந்து கொள்கின்றனர்.

ஈரோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுமுடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், காங்கேயத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் கோவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சிவகிரி பொன்காளியம்மன் கோவில் திருவிழா". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/Mar/24/sivagiri-ponkaliamman-temple-festival-thousands-of-firebrands-pay-homage-3813902.html. பார்த்த நாள்: 10 May 2024. 
  2. "மிகவும் பழமையான பொன்காளியம்மன் கோவில் - ஈரோடு". மாலை மலர். https://www.maalaimalar.com/devotional/temples/2019/02/20075121/1228577/Amman-Temple.vpf. பார்த்த நாள்: 10 May 2024. 
  3. "Arulmigu Ponkaliamman Temple, Thalaiyanallur, Kodumudi - 638109, Erode District [TM010249].,Ponkaliamman,Ponkaliamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்காளி_அம்மன்_கோவில்&oldid=3952511" இலிருந்து மீள்விக்கப்பட்டது