சோளகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோளகர்
ஒரு சோளகப் பழங்குடி (1909).
மொத்த மக்கள்தொகை
20,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
மொழி(கள்)
சோளகர் மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இருளர், தமிழர், யருக்களர்

சோளகர் (Sholaga) எனப்படுபவர்கள் தமிழகத்திலும்[1] கர்நாடக மாநிலத்திலும் வசிக்கும் பழங்குடி மக்களாவர்.

வாழும் பகுதிகள்[தொகு]

சோளகர் வாழும் பகுதிகள் மலைக்காடுகளில் உள்ள பகுதிகளில், இலிங்காயத்தார் என்னும் மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகிறது.[2]

சோளகர் வாழ்க்கை நிலை[தொகு]

காடுகளில் வேட்டையாடுதலை முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்த இவர்கள் சொந்த நிலமோ, உழவு மாடுகளோ இல்லாததால், கூலி விவசாயிகளாக இலிங்காயத்தாரிடம்[சான்று தேவை] வேலை செய்கின்றனர்.

தெய்வ வழிபாடு[தொகு]

சோளகர் இந்து சமயதைப் பின்பற்றுகின்றனர். மகேசுவரன், இரங்கசாமி, ஆகியவை அவர்களின் முக்கிய கடவுள்களாகவுள்ளனர்.[3]

மொழி[தொகு]

இவர்கள் திராவிட மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றான சோளகர் மொழியைப் பேசுகின்றனர்.

சோளகர் தொட்டி[தொகு]

இம்மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் சோளகர் தொட்டி புதினத்தில் ச. பாலமுருகன் பதிவுசெய்துள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. http://www.tribal.gov.in/WriteReadData/CMS/Documents/201212010351394570312File1066.pdf
  2. [1]
  3. Singh, Nagendra Kr. Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography, Volume 1 (2006 ed.). New Delhi: Global Vision Publication House. pp. 759–763. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182201682. பார்க்கப்பட்ட நாள் 6 September 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளகர்&oldid=2582471" இலிருந்து மீள்விக்கப்பட்டது