விக்கிப்பீடியா:விக்சனரி பார்
விக்சனரி பார்! என்பது தமிழ் விக்கித் திட்டங்களில் சில இடங்களில் பொருள் தெரியாச் சொற்களுக்கு ஒவ்வொரு முறையும் விக்சனரிக்கு ஓடாமல், தெரியாச் சொல்லின் மீது இரு சொடுக்கல் (Double Click) செய்வதன் மூலம் அவற்றுக்கான விளக்கத்தை அதே பக்கத்தில் சொல்லுக்கு அருகிலேயே சிறிய பெட்டியில் பெற முடியும். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று பக்கம் மறு ஏற்றம் (Reload) ஆகாது. எனவே, இதனைப் பயன்படுத்துவது இணையப் பயன்பாட்டு அளவையும் குறைக்கும். இது ஆங்கில விக்கிசெய்தி திட்டத்தில் தொடங்கப்பட்டுத் தற்போது பல திட்டங்களில் பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. இது தமிழ் விக்கித் திட்டங்களுக்கேற்ப சூர்யபிரகாசால் தனிப்பயனாக்கப்பட்டது. விக்சனரியில் சோடாபாட்டில் நிர்வாக உதவிகளைச் செய்து கொடுத்தார். மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும். இது இயங்குவதற்கு, உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயக்கத்தில் இருக்க வேண்டும்.
நிறுவல்
[தொகு]கருவியாக நிறுவ
[தொகு]- என் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள விக்சனரி பார்! என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.
- என் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → விக்சனரி பார்!
நிரல்வரியாக நிறுவ
[தொகு]- இதனை நிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)
importScript('பயனர்:Surya_Prakash.S.A./விக்சனரிபார்.js');