ஹோவார்ட் ஹியூஸ்
ஹோவார்ட் ஹியூஸ் | |
---|---|
பிறப்பு | Howard Robard Hughes, Jr. திசம்பர் 24, 1905 Humble, Texas, US |
இறப்பு | ஏப்ரல் 5, 1976 Houston, Texas, US | (அகவை 70)
கல்லறை | Glenwood Cemetery, Houston, Texas |
இருப்பிடம் | Houston, Texas |
கல்வி | Thacher School |
படித்த கல்வி நிறுவனங்கள் | California Institute of Technology, Rice University (dropped out in 1924) |
பணி | Chairman of Hughes Aircraft |
செயற்பாட்டுக் காலம் | 1926–1976 |
சொந்த ஊர் | Houston, Texas |
சொத்து மதிப்பு | USD $1.5 billion at the time of his death (approximately 1/1190th of US GNP)[1] |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | Hughes Aircraft, Howard Hughes Medical Institute |
வாழ்க்கைத் துணை | Ella Rice (தி. 1925–1929) Terry Moore (தி. 1949–1976) (alleged)Jean Peters (தி. 1957–1971) |
வார்ப்புரு:Infobox aviator | |
கையொப்பம் |
ஹோவர்ட் ரோபார்ட் ஹியூஸ், ஜூனியர் (டிசம்பர் 24, 1905 [2] - ஏப்ரல் 5, 1976) ஒரு அமெரிக்க வர்த்தக புள்ளியாக இருந்தார். இவர் முதலீட்டாளர், பொறியாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் கொடையாளர் ஆகிய பன்முகங்களைக் கொண்டவர். இவர் உலகின் பணக்கார்களின் ஒருவராக இருந்தார். இவர் 1920 ஆண்டிற்கு பிறகு, பெரிய அளவிலான முதலீடுகளை செய்தும் சச்சரவு மிக்க படங்களை உருவாக்கியும் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளராக பிரபலமடைந்தார். இவற்றுள் குறிப்பிடத்தக்க படங்களில் தி ராக்கட்(1928), ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்(1930), ஸ்கேர்ஃபேஸ்(1932), மற்றும் தி அவுட்லா(1943) ஆகிய குறிப்பிடத்தக்கவை. வரலாற்றில் குறிப்பிடத்தக்க வானூர்தியாளர்களில் ஹியூஸ் முக்கியம் வாய்ந்தவர். இவர் பல உலக சாதனைகளை செய்துள்ளார். ஹியூஸ் எச்-1 ரேசர் மற்றும் எச்-4 "எர்குளிஸ்" ஆகியவற்றையும் உருவாக்கியவர் இவரே. அமெரிக்க வானூர்திகளுடன் இணைந்த டிரான்ஸ் வேர்ல்டு வானூர்திகளை விரிவாக்கினார்.
இளைய பருவம்
[தொகு]இவர் பிறந்த இடம் ஹம்பிள் அல்லது ஹௌஸ்டன், டெக்சஸ் என்று அறியப்படுகிறது. பிறந்த தேதியும் சரியாக அறிய முடியவில்லை. எனினும் இவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்ததாக குறிப்பிடுகிறார். இவர் பெற்றோர் மிசௌரியைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் ஆவர். சிறு வயதில் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும் போட்டியிட நம்பிக்கையின்றி வெகு விரைவில் ஆர்வமிழந்தார் தலை சிறந்த ஆட்டக்காரர்களுடனும் விளையாடியுள்ளார். தன் தந்தையின் மரணத்திற்கு பின் ரைஸ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை நிறுத்திக் கொண்டார். திருமணத்திற்கு பின் மனைவியுடன் லாஸ் ஏஞ்சலசிற்கு குடி பெயர்ந்தார
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Klepper and Gunther 1996, p. xiii.