ஹைனக-மிக்கூலிச் குழலுட்குறுக்க அறுவை மருத்துவம்
ஹைனக-மிக்கூலிச் குழலுட்குறுக்க அறுவை மருத்துவம் (Heineke-Mikulicz strictureplasty) என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குழலுட்குறுக்க அறுவை மருத்துவமுறை. இம்மானுவல் லீ, ஒரு இந்திய அறுவைமருத்துவ வல்லுனரான கட்டாரியால் விவரிக்கப்பட்ட கடைச்சிறுகுடலின் குழல்வடிவ குறுக்கங்களின் அறுவைமுறைப் போன்ற நுட்பத்தை அறிந்தபின் 1976 ஆம் ஆண்டில் குரானின் நோய்க்குத் தீர்வை அளிப்பதற்காக இம்முறையை அறிமுகப்படுத்தினார்.[1] இந்த மருத்துவமுறை ஹைனக-மிக்கூலிச்சின் அகலமாக்குமுறையை ஒத்திருப்பதால் அவர்களின் பெயராலேயே இதுவும் வழங்கப்படுகின்றது
இந்த நுட்பம் 7 செ.மீக்குக் குறைவாக உள்ள குழலுட்குறுக்கங்களைச் சரிசெய்ய உகந்ததாகும். இந்த நுட்பமுறையில் வயிற்றோடு பொருந்திய குடலின் உட்பகுதியில் நீளவாக்கில் குழல்குறுக்கத்திற்கு அண்மையில் 2 செ.மீ சேய்மையில் 2 செ.மீ என்ற அளவில் உட்புறமாக வெட்டப்படுகின்றது.[2] பின்னர் குறுக்குவாக்கில் ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளில் இந்தக் குடலறுவைப்பகுதி மூடப்படுகின்றது.
சான்றுகள்
[தொகு]- ↑ Lee EC, Papaionnou N (1982). "Minimal surgery for chronic obstruction in patients with extensive or universal Crohn's disease". Annals of the Royal College of Surgeons of England 64: 229–233.
- ↑ Hurst R and Michelassi F (1998). "Strictureplasty for Crohn's Disease: Techniques and Long-term Results". World Journal of Surgery 22: 359-53. https://archive.org/details/sim_world-journal-of-surgery_1998-04_22_4/page/359.