ஹென்றி புய்சன்
Appearance
ஹென்றி புய்சன் (ஜூலை 15, 1873 - ஜனவரி 6, 1944[1]) பாரிசில் பிறந்த வளிமண்டல ஆய்வாளராவார். ஹென்றி புய்சன் ஜூலை 15, 1873ல் பாரிசில் பிறந்தார். இவர் 1901ல் முனைவர் பட்டம் பெற்றார். 1914 முதல் 1943 வரை மார்செல்லில் இயற்பியல் பேராசிரியாகப் பணியாற்றினார். இவருடன் சார்லஸ் பேப்ரியும் இணைந்து புற ஊதாக் கதிர்களை வளி மண்டலத்தினை ஆராய்ந்தனர். இவர்கள் ஸ்பெக்ட்ராஸ்கோப் மூலம் புற ஊதாக் கதிர்களை வளி மண்டலத்தில் அளவிட்டனர். வளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்கள் உறிஞ்சுப்படுதலை கண்டுபிடித்தனர். அதன் காரணமாக 1913ல் ஓசோன் படலத்தினை கண்டறிந்தனர்.
இவர் ஜனவரி 6, 1944ல் மார்செல்லில் இறந்தார்.
கருவி நூல்
[தொகு]ஓசோன் படலத்தில் ஓட்டை - ஏற்காடு இளங்கோ மங்கை வெளியீடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-08-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-23.