ஹரிஹரன் (பாடகர்)
Appearance
ஹரிஹரன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 3, 1955 |
இசை வடிவங்கள் | திரைப்படப் பாடல்கள், கசல் |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர் |
இசைத்துறையில் | 1977–இன்றுவரை |
ஹரிஹரன் (Hariharan) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகராவார். இவர் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். கசல் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சிப் பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இக்குழுவினால் பல தனிப் பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். 2009இல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்குப் பின்னணி இசையும் அமைத்துள்ளனர்.[1][2][3]
அறிமுகம்
[தொகு]இவர் 1992 ஆம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டார். இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் "தமிழா தமிழா நாளை" என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுகப் படம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hariharan Interview: मैं सौ फीसदी बंबइया हूं! लेकिन विकिपीडिया वाले हैं कि मेरी बात सुनते ही नहीं". Archived from the original on 2 October 2024. பார்க்கப்பட்ட நாள் 9 June 2023.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ ""T-Series' Hanuman Chalisa Crosses 1 Billion Views On Youtube"". NDTV. Archived from the original on 2 October 2024. பார்க்கப்பட்ட நாள் May 29, 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹரிஹரன்
- Sai, Veejay (4 October 2012) Success… on his terms. தி இந்து