விளக்கெண்ணெய்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விளக்கெண்ணெய் (castor oil) என்பது ஆமணக்கு விதைகளில் (ricinus communis) இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும்.[1] இது பிற எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. எனவே சற்று பிசுபிசுப்புடன் காணப்படும். இதன் கொதிநிலை 313 °C (595 °F), அடர்த்தி 961 கிகி/மீ3.[2] விளக்கெண்ணெய் குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவப்பயன்கள் நிறைந்தது. பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
வீடுகளில் விளக்கெண்ணெய் தயாரித்தல்
[தொகு]எளியமுறையில் வீடுகளில் விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதற்கு ஆமணக்கு விதைகளை வெயிலில் உலர்த்தி அவற்றை உரலில் இட்டு நன்கு இடிக்கவேண்டும். அது கிட்டத்தட்ட பசை போல இருக்கும். பின்னர் பானை ஒன்றில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரில் இடித்துவைத்துள்ள ஆமணக்கைக் கொட்டிக் கிளர வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் மிதக்கும். அதனைச் சிறிது சிறிதாகக் கரண்டியால் முகந்து வேறு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். சேகரித்த எண்ணெயுடன் சிறிய அளவில் நீர்த்துளிகள் கலந்து இருக்கும். எனவே எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்க வேண்டும். சலசல என்ற சத்தத்துடன் நீர் மெல்லமெல்ல வற்றும். நீர் முழுவதுமாக வற்றிபின் சத்தம் அடங்கிவிடும். இப்போது எண்ணெயை ஆற வைத்து வடிகட்டி எடுத்து புட்டிகளில் அடைத்துப் பயன்படுத்தலாம். இயற்கையான முறையில் கண்மை தயாரிக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.
காட்டாமணக்கு
[தொகு]காட்டாமணக்கு செடிகளில் இருந்து பெருமளவில் எண்ணெய் எடுக்கப்பட்டு உயவு எண்ணெயாகவும் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thomas, Alfred (2005). "Fats and Fatty Oils". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a10_173.
- ↑ Aldrich Handbook of Fine Chemicals and Laboratory Equipment. Sigma-Aldrich. 2003.