வில்மோஸ் சிக்மண்ட்
வில்மோஸ் சிக்மண்ட் | |
---|---|
வில்மோஸ் சிக்மண்ட் | |
பிறப்பு | அங்கேரி | சூன் 16, 1930
இறப்பு | சனவரி 1, 2016 கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 85)
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1955 முதல் |
வில்மோஸ் சிக்மண்ட் (Vilmos Zsigmond, சூன் 16, 1930 - சனவரி 1, 2016) அங்கேரிய- அமெரிக்க ஒளிப்பதிவாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி இவர் இதுவரையிலான ஒளிப்பதிவாளர்களில் மிகவும் செல்வாக்கான(most influential) 10 பேரில் ஒருவர் என தெரிவு செய்யப்பட்டார். இவர் ஹங்கேரியில் பிறந்தவர்.[1][2] அகெதமி ஆஃப் டிராமா அண்ட் சினிமா கல்லூரியில் திரைப்படம் பற்றி பயின்றார்.[3][4] ஒளிப்பதிவில் முதுகலைப்(MA) பட்டம் பெற்றார். பின்னர் லாஸ் ஏஞ்சலஸ்க்கு குடி பெயர்ந்தார். அங்கு புகைப்பட நிபுணராகப் பணியாற்றினார். 1960 களில் நிரைய குறைந்த முதலீட்டுத் திரைப்படங்களிலும், கல்வி ஆவணப்படங்களைலும் பணிபுரிந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். தி சேடிஸ்ட் எனது இவர் முதலில் பணியாற்றிய திரைப்படம் ஆகும்.குலோஸ்டு என்கவுண்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட் எனும் திரைப்படத்திற்காக 1977 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார். 2012 ஆம் ஆண்டு யூரி நெய்மேன் என்பவருடன் இணைந்து லாஸ் ஏஜ்சல்ஸ் நகரில் குளோபல் சினிமேட்டோகிராஃபி இன்ஸ்டிட்டியூட் எனும் ஒளிப்பதிவு பயிலரங்கத்தை நிறுவினார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schaefer, Dennis (1986). "Vilmos Zsigmond". Masters of Light: Conversations with Contemporary Cinematographers. University of California Press. p. 311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-05336-6.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help); Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Vilmos Zsigmond Biography (1930-)
- ↑ "Vilmos Zsigmond". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2008-12-27.
- ↑ "Vilmos Zsigmond". MSN. Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2008-12-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.