வின்லினக்சு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வின்லினக்ஸ் ஓரு குனூ/லினக்ஸ் இயங்குதளம். இது விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிப் பயன்படுத்தத்தக்கது.. இது விண்டோஸ் இயங்குதளத்தினுள்ளேயே மாற்றங்கள் செய்து, தனிப்பயனாக்கி பயன்படுத்தப்படக்கூடியது. FAT32 முறையில் வடிவூட்டப்பட்ட வன்தட்டு வகிர்வுகளில் நிறுவப்படக்கூடியது . இது ஏனைய விண்டோஸ் வகிர்வுகளோடும் தொடர்பாடக்கூடியது. இது விண்டோஸ் 95, 98, மில்லேனியம், பதிப்புக்களில் இயங்கக்கூடியது. விண்டோஸ் 2000, XP, விஸ்டா இயங்குதளங்களில் இயங்காதெனினும் நிறுவப்படக்கூடியது.
இதன் பிந்தைய பதிப்பு வின்லினக்ஸ் 2003 ஆகும் இது விண்டோஸ் கணினியில் ஓரு குறுக்கு வழியின் மூலம் ஆரம்பிக்கக்கூடியது. இவ்வாறு ஆரம்பித்ததும் விண்டோஸின் இயக்கமானது நிறுத்தப் பட்டு கணினி லினக்ஸ்ஸை ஆரம்பிக்கும். பின்னர் லினக்ஸ்ஸின் இயக்கத்தை நிறுத்தி கணினியை மீள ஆரம்பிக்கும்போது விண்டோஸில் கணினி பழையபடி இயங்கும். இது KDE பணிச்சூழலை பயனர்களுக்கு வழங்குகின்றது. வரைகலை இடைமுகம் KDE இல் இருந்து வருவதாகும் விண்டோஸில் இருந்து வருவதல்ல.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- வின்லினக்ஸ் பதிவிறக்கம் பரணிடப்பட்டது 2011-05-19 at the வந்தவழி இயந்திரம்