விச்சிக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவர். விச்சிமலை நாட்டின் குறவஅரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர் பெருங்குறவர் என்றெல்லாம் சங்கநூல்களில் இவர் குறிப்பிடப்படுகிறார்.

பாரிமகளிரை மணக்க மறுத்தவன்[தொகு]

பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டினார். விச்சிக்கோ பாரிமகளிரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. [1]

விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோ[தொகு]

விச்சிக்கோ தன் தம்பி இளவிச்சிக்கோவுக்குக் கொடைஉள்ளம் இல்லாத நன்னன் ஒருவனின் மகளைத் திருமணம் செய்துவைத்தான். [2]

விச்சியர் பெருமகன் வேந்தரோடு போரிட்டது[தொகு]

விச்சியர் பெருமகன் விற்படை வீரர்களை மிகுதியாகப் பெற்றிருந்தான். இவன் வேந்தரை எதிர்த்துப் போரிட்டான். இந்தப் போர் புலியும் காடைப்பறவையும் மோதுவது போல் உள்ளது என்று பேசிக்கொண்டு குறும்பூர் மக்கள் ஆரவாரம் செய்தனர். [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. குறவர்கபிலர் - புறநானூறு 200
  2. வன்பரணர் - புறநானூறு 151
  3. பரணர் - குறுந்தொகை 328
"https://ta.wikipedia.org/w/index.php?title=விச்சிக்கோ&oldid=3851526" இலிருந்து மீள்விக்கப்பட்டது