உள்ளடக்கத்துக்குச் செல்

விசுனோ தத் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசுனோ தத் சர்மா (Vishno Datt Sharma) இந்தியாவில் சம்மு-காசுமீர் மாநிலத்தின் சம்மு நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் 1998-99 காலப்பகுதியில் பன்னிரண்டாவது மக்களவையில் உறுப்பினராகவும் இருந்தார். முன்னதாக விசுனோ தத் சர்மா 1972 ஆம் ஆண்டு சம்மு நகராட்சி மன்றத்தின் தலைவராகவும் சம்மு மாவட்டத்தின் சம்மு கிழக்கு தொகுதியில் இருந்து சம்மு-காசுமீர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3] ] தொழில் ரீதியாக ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளரான இவருக்கு இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய கவுன்சிலின் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.

விசுனோ தத் சர்மா 2001 ஆம் ஆண்டு இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுனோ_தத்_சர்மா&oldid=3190595" இலிருந்து மீள்விக்கப்பட்டது