உள்ளடக்கத்துக்குச் செல்

வார்டு எண் .21, கொல்கத்தா மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உட்பிரிவு எண் 21, கொல்கத்தா மாநகராட்சி  (Ward No. 21, Kolkata Municipal Corporation) கொல்கத்தா மாநகராட்சி ஆணையத்தின் ஒரு நிர்வாக பிரிவு ஆகும். இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள வடக்கு கொல்கத்தாவின் புறநகர் பகுதிகளான இயோராபாகன் மற்றும் மலபாரா பகுதிகள் இதில் உள்ளடங்கியுள்ளன.

வடக்கில் நிம்தலா காட் தெருவுக்குச் செல்லும் துறைமுகப் பொறுப்புக்கழக சாலை, கிழக்கில் பைசுனாப் சரண் செட் தெருவு மற்றும் இயதுலால் மல்லிக் சாலை; தெற்கில் காளிகிருட்டிணா தாகூர் தெரு, தர்பநாராயண் தாகூர் தெரு மற்றும் ஊக்ளி ஆற்றங்கரைக்கு செல்லும் துறைமுகப் பொறுப்புக்கழக சாலை, மேற்கில் ஊக்ளி ஆறு ஆகியன இவ்வுட்பிரிவுக்கு எல்லைகளாக உள்ளன.[1][2]

மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கொல்கத்தா நகராட்சி ஆணையத்தின் உட்பிரிவு எண். 21 இன் மொத்த மக்கள் தொகை 21,187 ஆக இருந்தது. இதில் 13,127 (62%) ஆண்கள் மற்றும் 8,060 (38%) பெண்கள் இருந்தனர். 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எண்னிக்கை 1,295 ஆகும். கல்வியறிவு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,016 ஆக இருந்தது. மக்கள் தொகையில் இது 78.12% ஆகும்.[3]

மேற்கோள்

[தொகு]
  1. Kolkata: Detail Maps of 141 Wards with Street Directory. D.P.Publications & Sales Concern, 66 College Street, Kolkata-700073, 4th edition 2003.
  2. "Municipal Wards". Yellow Pages.com. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
  3. "2011 Census – Primary Census Abstract Data Tables". West Bengal – District-wise. Registrar General and Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 15 June 2016.