வாகிட்டி சுனிதா லட்சும ரெட்டி
வாகிதி சுனிதா லட்சும ரெட்டி | |
---|---|
கிரண் குமார் ரெட்டியின் அமைச்சரவையில் (பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நல துறை , மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு துறை, பெண்கள் சுய உதவிக் குழுக்கள், இந்திரா காந்தி யோஜனா திட்டம் மற்றும் ஓய்வூதியங்களின் துறை) அமைச்சராக பதவி வகித்தார். | |
பதவியில் 1 டிசம்பர் 2010 – 2014 | |
மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1999–2014 | |
தொகுதி | நர்சாப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஏப்ரல் 1968 கோமாரம், சிவம்பேட்டை மண்டலம், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
துணைவர் | மறைந்த ஸ்ரீ வாகிட்டி லட்சும ரெட்டி |
பிள்ளைகள் | ஸ்ரீநிவாஸ் ரெட்டி, சசிதர் ரெட்டி |
வாழிடம்(s) | கோமாரம், சிவம்பேட்டை மண்டலம் , மேடக் மாவட்டம். |
வாகிதி சுனிதா இலட்சும ரெட்டி (Vakiti Sunitha Laxma Reddy) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், தெலங்காணாவின் மேடக் மாவட்டம், நர்சபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரே தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மருத்துவர் ராஜசேகர ரெட்டி அமைச்சரவையிலும் ரோசையா தலைமையிலான ஆட்சியிலும் சிறுபான்மைத்துறை அமைச்சராக பணியாற்றினார். கிரண் குமார் ரெட்டியின் அமைச்சரவையின் மறுசீரமைப்பில், இவருக்கு இந்திரா காந்தி யோஜனா திட்டம் மற்றும் ஓய்வூதியங்களின் துறை ஒதுக்கப்பட்டது.
ஏப்ரல் 3, 2019 அன்று, மேடக் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார். தற்போது தெலங்காணா அரசு திசம்பர் 27ஆம் தேதி வாகிதி சுனிதா லட்சும ரெட்டியை மகளிர் ஆணைய தலைவராக நியமித்தது.
ஆந்திராவில் பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- "Vakiti Sunitha Laxma Reddy". sunithalaxmareddy.in. Archived from the original on 4 December 2013. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- Ali, Roushan (27 March 2019). "V Sunitha Laxma Reddy meets KCR, to board Car soon". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/v-sunitha-laxma-reddy-meets-kcr-to-board-car-soon/articleshow/68590284.cms. பார்த்த நாள்: 11 November 2019.