வாகல் ஆறு
வாகல் ஆறு | |
---|---|
வாகல் ஆற்று வடிநிலம் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராசத்தான் & குசராத்து |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | உதய்பூர் மாவட்டம்[1] |
முகத்துவாரம் | சபர்மதி ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 24°20′27″N 73°06′31″E / 24.3407°N 73.1085°E |
வடிநில அளவு | 1851 சதுர கிலோ மீட்டர்[2] |
வாகல் ஆறு (Wakal River) இந்தியாவின் இராசத்தான் மற்றும் குசராத்து மாநிலங்களில் ஓடும் சபர்மதி ஆற்றின் துணை ஆறாகும்.
ஆற்றோட்டம்
[தொகு]வாகல் ஆறு ஆரவல்லி மலைத்தொடரின் தென்மேற்கு திசையில் உருவாகி, 158 கிலோமீட்டர் தூரம் கடந்து சபர்மதி ஆற்றுடன் இணைகிறது. மன்சி மற்றும் பர்வி ஆகியவை வாகல் ஆற்றின் இரண்டு முக்கிய துணை ஆறுகளாகும்.
நீர்ப்பாசனம்
[தொகு]வாகல் ஆற்றின் நீர்ப்பாசனப் பகுதி 1851 சதுர கிலோமீட்டர்[2] பரப்பளவில் உள்ளது. இது இராசத்தானின் உதய்பூர் மாவட்டம் மற்றும் குசராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் பரவியுள்ளது.[3] 98% வடிநிலப் பகுதி இராசத்தானிலும், மீதமுள்ள பகுதி குசராத்திலும் உள்ளது.[4][5] வடிநிலத்தின் சராசரி வருடாந்திர மேற்பரப்பு நீர் உற்பத்தி 319.4 மில்லியன் கன மீட்டர் ஆகும்.[2]
இந்த நீர்நிலைகளில் 24 சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளன. மொத்த நேரடிச் சேமிப்பு திறன் 65.98 மில்லியன் கன மீட்டர் ஆகும்.[6] மான்சி வாகல் அணை இந்த வடிநிலத்தில் உள்ள மிகப்பெரிய அணையாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Surface Water Resources Assessment Report - Wakal River Basin, Rajasthan, India. Global Water Sustainability Program. 2008.
- ↑ 2.0 2.1 2.2 Planning of Water Resources of Rajasthan State, Report 4.2 - Basin-Wise Water Availability. Tahal Group. 2014.
- ↑ 3.0 3.1 Jain, Sharad K; Agarwal, Pushpendra K; Singh, Vijay P (2007). Hydrology and Water Resources of India. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402051807.
- ↑ Wakal Hydrogeology Assessment Report - Wakal River Basin, Rajasthan, India. Miami: Global Water Sustainability Program. 2008.
- ↑ Sinha, A. K. (2012). An Integrated Approach of Groundwater Management in Wakal River Basin using Remote Sensing and Geographical Information System. Udaipur.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Planning of Water Resources of Rajasthan State, Report 4.3 - Detailed Study of Catchment Area. Tahal Group. 2014.