உள்ளடக்கத்துக்குச் செல்

வாகன நிறுத்துமிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வழிப் பாதையுடன் கூடிய வண்டித் தரிப்பிடம் ஒன்று.

வாகனத் தரிப்பு வசதி என்பது, பொதுவாகத் தற்காலத் தன்னியக்க வண்டிகள் (Auto-mobiles) அல்லது மோட்டார் வண்டிகள் (Motor Vehicles) என அழைக்கப்படும் வண்டிகள் தரித்து நிற்பதற்காக அமைக்கப்படுகின்ற இடவசதிகளைக் குறிக்கும். தற்காலத்தில், வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளின் நகரப்பகுதிகளிலும், தன்னியக்க வண்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரம் அதிகரித்து வருகின்ற பகுதிகளில், கூடிய அளவில் தனிப்பட்டவர்கள் வண்டிகளைச் சொந்தமாக வாங்குகிறார்கள். இதனால், தெருக்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஒருபுறம் இருக்க தேவையான இடங்களில் வண்டிகளை நிறுத்துவதற்கான இடத் தேவையும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால், நகர வடிவமைப்பிலும், தனித்தனி நிலங்களை மேம்படுத்தும் போதும் தரிப்பிட வசதிகளை உருவாக்குவதில் மிகுந்த கவனம் எடுக்கப்படுகின்றது.[1][2][3]

அங்காடித் தொகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பெரிய வணக்கத் தலங்கள், அரச அலுவலகங்கள் போன்றவற்றுக்கு அண்மையில் பெருமளவில் வண்டிகள் நிறுத்தப்படுவதற்கான இடவசதிகள் தேவைப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fried, Ben (20 August 2008). "How to Fix Off-Street Parking Policy, Before It's Too Late". StreetsBlog NYC. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
  2. Communities.gov.uk பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம்
  3. "Out, Damned Spot! How D.C.'s Onerous Parking Requirements Slow Development". 21 March 2013. Archived from the original on 2013-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகன_நிறுத்துமிடம்&oldid=4102896" இலிருந்து மீள்விக்கப்பட்டது