வழக்கறிஞர் தினம்
வழக்கறிஞர் தினம் (Lawyers' Day) என்பது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் காணப்படும் மாநிலமான ஒரிசாவில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். இம்மாநிலத்தில் மதுசூதன் தாசு என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரின் பிறந்த தினமான ஏப்ரல் 28 ஆம் நாளில் வழக்கறிஞரின் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆங்லேயர் ஆட்சிக் காலத்தில் மதுபாபு அல்லது மது பாரிஸ்டர் எனப் பிரபலமான ஒரியாவின் வழக்கறிஞராகக் கருதபட்டவர்.[1][2] இவர் ஒரியாவின் சட்டக்கல்வியின் முதல் பட்டதாரி ஆவார். மாநிலத்தின் பல வழக்கறிஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக விளங்குபவர், அவர் திறமையை வெளிபடுத்தும் நிகழ்வு பூரிம்கந்தா வழக்கில் ராயட் என்ற ஏழைக்கு ஆதரவாக வாதிட்டு பலமான எதிர் தரப்பினரை பணியவைத்தவர். இரண்டாவது வழக்கான பூரி சகநாதர் ஆலயம் தொடர்புடைய வழக்கிலும் தன் திறமை வெளிப்படுத்தும் தீர்ப்பாக அமைந்தது. சட்டத் துறையில் பல பெண்கள் வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இத்தினம் சுவாமிமான் திவஸ் எனவும் பின்பற்றப்படுகிறது.[3][4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lawyers pay tributes to Madhu Babu in style" Thehindu, April 29, 2007 Retrieved
- ↑ "Orissa: Lawyers’ Day celebrated at Angul" பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம் orissadiary.com
- ↑ "Bar Associations reminisced Madhubabu"
- ↑ "LAWYERS MUST BE DEDICATED TO THEIR CAREER"
- ↑ "Odisha salutes Madhu babu"
- ↑ "BE DEDICATED TO SOCIETY LIKE MADHUBABU"