வல்லார்
Appearance
வல்லார் என்னும் சஙக கால ஊரில் வல்லார் கிழான் பண்ணன் என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான். இந்த ஊர் வலார் என்றும் வழங்கப்பட்டது.
வல்லார் புன்புல நிலம். இந்த ஊர் பெருங் குறும்புகளால் சூழப்பட்டிருந்தது. குறும்பு என்பது முல்லைநிலத்து ஊர்.
இவ்வூரில் மரத்திலிருந்து விழுந்த விளாம்பழத்தை அவ்வூரில் வாழ்ந்த எயிற்றியரின் குழந்தைகளும், யானைக் கன்றுகளும் உருட்டி விளையாடுவார்களாம். [1]
இந்தச் செய்திகளைத் தரும் பாடலைப் பாடியவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் என்பவர். வல்லம் என்னும் ஊர் சோணாட்டில் உள்ளது. புலவர் சோணாட்டவர்; எனவே இந்த வல்லார் என்னும் ஊரும் சோணாட்டு ஊர் எனலாம்.
வல்லம், வல்லார் ஆகிய ஊர்கள் ஒன்றாகா.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ புறம் 181