ழீன் இரிச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழீன் இரிச்சர்
பிறப்பு1630
பிரான்சிய இராச்சியம்
இறப்பு1696
பாரிசு
பணிவானியல் வல்லுநர், இயற்கையியலர், நில அளவாய்வாளர், traveler
வேலை வழங்குபவர்
  • French Academy of Sciences

ழீன் இரிச்சர் (Jean Richer) (1630–1696)ஒரு பிரெஞ்சு வனியலாளர் ஆவார். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தில் வானியல் உதவியாளராக ஜியோவன்னி டொமினிகோ காசினியின் வழிகாட்டுதலின்கீழ் பணிபுரிந்தார்.

பிரெஞ்சு கல்விக்கழகத்தின் வேண்டுதலின்பேரில் இவர் 1671 முதல் 1673 வரை பிரெஞ்சு கயானாவின் காயென்னேவில் செய்முறைகளும் வானியல் நோக்கீடுகளும் மேற்கொண்டார். செவ்வாயின் சூரியவண்மை இருப்பில் இவரும் பாரீசில் காசினியும் ஒருங்கே செய்த நோக்கீடுகளும் அளவைகளும் புவிக்கும் செவ்வாய்க்கும் இடையில் உள்ள தரவுசார்ந்த தொலைவை முதன்முதலாக மதிப்பிட உதவின. அவர்கள் இருவரும் இந்தத் தொலைவைப் பயன்படுத்தி, பின்னர் புவிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவைக் ( வானியல் அலகு) கணக்கிட்டனர்.[1]

இவர் ஒரு நொடியில் அரை ஊசலாட்டம் உள்ள நொடித் தனி ஊசலின் நீளத்தை அளந்தார். இது பாரீசில் உள்ள இலிகுனே ஊசலைவிட 1.25 மடங்கு (2.8மி.மீ*) குறைவாக உள்ளதைக் கண்டார்.[2] பின்னர், அய்சக் நியூட்டன் ஈர்ப்பு விசை பொருள்களுக்கிடையில் உள்ள தொலைவின் இருமடிக்கு தலைக்கீழ் விகிதத்தில் மாறுவதால், இரிச்சர் ஆய்வின் புறநிலையான முடிவு நிலநடுவரைக்கு அண்மையில் உள்ள கயென்னே பாரீசை விட புவி மையத்தில் இருந்து கூடுதல் தொலைவில் அமைதலைக் காட்டுகிறது. எனவே புவி கோள வடிவத்தில் இருக்க முடியாது. அது நிலநடுவரையருகில் மற்றப் பகுதியை விட பெருத்து இருக்கிறது என்பது தெளிவாகிறது. புவி மேற்பரப்பில் ஈர்ப்பு விசை மாறுவதை முதன்முதலில் நோக்கியவர் இரிச்சரே. மேலும், இது ஈர்ப்பளவையியலைத் தோற்றுவித்தது எனலாம்.

இவரது 1673 பாரீசு வருகை விழாப்போல கொண்டாடப்பட்டது. இவரது தரவுகளின் முடிவுகள் கணிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ஆய்வு அறியப்படாத காரணங்களால் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த வெளியீடு 1879 இல் Observations Astronomiques et Physiques Faites en L'Isle de Caïenne par M. Richer, de l'Academie Royale des Sciences. எனும் தலைப்பில் இரிச்சரின் பெயரில் வெளியிடப்பட்டது. விரைவிலேயே இவருக்கு செருமனியில் பொறியியல் திட்டம் ஒன்று வழங்கப்பட்டது. இவருடைய இதற்குப் பிந்தைய வாழ்க்கை ஆவணப்படுத்தப்படவில்லை. இவர் 1696 இல் பாரீசில் இறந்ததாகப் பெரும்பாலான வாழ்க்கைவரைவாளர்கள் கூறுகின்றனர்.

  • குறிப்பு: தனி ஊசல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல 2.5 மணித்துளிகள் வேறுபாடு... ஒத்துப்போவதாக இல்லை. இந்த எண் 3.1 மணித்துளிகள் காலவேறுபாட்டைத் தருகிறது. உலகச் சிறுமம் மெக்சிகோ நகரில் அமைவதைப் போல ~5.2 எனில், இது மேலே குறிப்பிட்டது போல 2இன் பெருக்கலாக அல்லது இருமடங்காக அமைவதைக் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.scientificamerican.com/article.cfm?id=astronomical-unit-or-earth-sun-distance-gets-an-overhaul
  2. Poynting, John Henry; Joseph John Thompson (1907). A Textbook of Physics: Properties of Matter, 4th Ed.. London: Charles Griffin & Co.. பக். 20. https://books.google.com/books?id=TL4KAAAAIAAJ&pg=PA20. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ழீன்_இரிச்சர்&oldid=2734568" இலிருந்து மீள்விக்கப்பட்டது