லோங் அடிகள்
அதி வணக்கத்துக்குரிய லோங் அடிகள் (1896 - ஏப்ரல் 30, 1961) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய ஓர் அயர்லாந்து அடிகள் ஆவார். 1896இல் அயர்லாந்திலுள்ள லிமெரிக் என்னுமிடத்தில் பிறந்த இவர் 1920 இல் திருநிலைப்படுத்தப்பட்டார். 1921 இல் பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராக இணைந்தார்; விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாசிரியராகவும் நியமிக்கப்பட்டார். பட்டப் படிப்பக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முடித்தார்; கலை முதுமாணிப் பட்டமும் பெற்றார். 1936 முதல் 1954 வரை 18 ஆண்டுகள் பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார். யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக மாபெரும் கைத்தொழிற் களியாட்ட விழாவை நிகழ்த்தியவரும் இவரே. அயர்லாந்தின் யாழ்ப்பாணத்தான் என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்குப் பணியாற்றச் சென்றார். 1961 இல் லண்டனில் காலமான இவர் அயர்லாந்தில் அடக்கம் செய்யப்பட்டார். 1990 இல் இலங்கைத் தேசிய வீரர் தினத்தன்று இவரது நினைவாக தபாற்தலையொன்று வெளியிடப்பட்டது