லிமெரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிமெரிக் (Limerick) என்பது ஆங்கில மொழியில் உள்ள ஒரு பாவகை ஆகும்[1]. புதினம், குறும்புதினம், சிறுகதை, புதுக்கவிதை, ஐக்கூ போல லிமெரிக் என்பது ஒரு புதிய வகை கவிதை ஆகும். 18ஆம் நூற்றாண்டில் லிமெரிக் அறிமுகமாகி செல்வாக்குப் பெறத் தொடங்கியது.[2][3]

பெயர்க் காரணம்[தொகு]

அயர்லாந்து நாட்டில் முன்சுடர் மாநிலத்தில் லிமெரிக் என்பது ஒரு சிறு நகரம். 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு போர் முடிந்து இந்த நகரத்திற்குத் திரும்பிய படை வீரர்கள் கூடி மகிழ்ந்து பாடுவார்கள். ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு வீரர் பாடுவர். ஒருவர் ஒரு அடியைப் பாடியதும் மற்றொருவர் தொடர்ந்து பாடுவார். அதில் இறுதிச் சொல் ஒலி ஒற்றுமையுடன் இருக்கும். லிமெரிக் என்னும் ஊரில் தோன்றியதால் இந்தக் கவிதைக்கு லிமெரிக் எனப் பெயர் ஏற்பட்டது[4][5].

லிமெரிக்கின் அமைப்பு[தொகு]

இந்தக் கவிதை ஐந்து அடிகளைக் கொண்டிருக்கும். முதலடியிலும் இரண்டாம் அடியிலும் கடைசி அடியிலும் உள்ள கடைசி சொற்கள் தம்முள் ஒலி ஒற்றுமை கொண்டிருக்கும். சில வினாடிகளில் எளிதாக மனப்பாடம் ஆகிவிடும் தன்மையும் ஓசை இனிமையும் கொண்டது. மழலையர் பாடல்கள் போல் இருக்கும். நகைச்சுவை கேலி, கிண்டல், பரிகசித்தல், ஆண் பெண் உறவுகள் ஆகியன நிறைந்திருக்கும். மனித வாழ்க்கையின் தத்துவங்களும் லிமெரிக் பாடல்களில் அண்மைக் காலத்தில் இடம் பெறுகின்றன. [6]

எட்வர்ட் லியர் என்பவர் லிமெரிக் பாடல்களைப் படைத்த முதல் கவிஞராகக் கருதப்படுகிறார். இவரைத் தொடர்ந்து பல ஆங்கிலக் கவிஞர்கள் லிமெரிக் பாடல்களைப் பாடியுள்ளனர்.

உசாத்துணை[தொகு]

  1. Limerick Lyrics. http://books.google.com/books?id=CBJAAAAAYAAJ&dq=limerick&pg=PR3-IA3. பார்த்த நாள்: 6 October 2014. 
  2. http://www.poemhunter.com/poems/limerick/page-1/22572547/#content
  3. An interesting and highly esoteric verse in limerick form is found in the diary of the Rev. John Thomlinson (1692–1761): 1717. Sept. 17th. One Dr. Bainbridge went from Cambridge to Oxon [Oxford] to be astronomy professor, and reading a lecture happened to say de Polis et Axis, instead of Axibus. Upon which one said, Dr. Bainbridge was sent from Cambridge,—to read lectures de Polis et Axis; but lett them that brought him hither, return him thither, and teach him his rules of syntaxis. From Six North Country Diaries, Publications of the Surtees Society, Vol. CXVIII for the year MCMX, p. 78. Andrews & Co., Durham, etc. 1910.
  4. Loomis 1963, pp. 153–157.
  5. "Siar sna 70idí 1973 Lios Tuathail - John B Keane, Limericks, Skinheads". YouTube. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2016-04-09.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லிமெரிக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Limerick bibliographies:

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமெரிக்&oldid=3634026" இலிருந்து மீள்விக்கப்பட்டது