லீலாதிலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லீலாதிலகம், 14 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கேரளத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஓர் இலக்கண நூல். இந்நூலில் படி ஒன்று 1908 இல் கண்டுபிடிக்கப்பட்டது[1]. இந்நூல் கேரளத்தில் பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர் மற்றும் சமசுக்கிருதச் சொல் வகைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இம்மணிப்பிரவாளப் பாடல்களில் சமசுக்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இது, சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமசுக்கிருதம் எவ்வாறு படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. இது போன்றே கேரளத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதப்பெற்று, இன்றும் கிடைக்கக்கூடிய மிகப் பழம்பெரும் நூல் வைசிக தந்திரம் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sujit Mukherjee, "A Dictionary of Indian Literature - One Beginnings to 1850, Orient Blackswan, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125014535, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125014539 434 pages

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலாதிலகம்&oldid=2698473" இலிருந்து மீள்விக்கப்பட்டது